பிரிஸ்பேன்: இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட்டில், தனது இரண்டாவது இன்னிங்ஸை துவக்கிய ஆஸ்திரேலிய அணி, விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் சேர்த்துள்ளது.

தற்போதைய நிலையில், இந்தியாவை விட 54 ரன்கள் முன்னிலைப் ப‍ெற்றுள்ளது.

ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 369 ரன்களை அடிக்க, இந்திய அணியோ பதிலுக்கு 336 ரன்களைச் சேர்த்தது. இந்தியாவின் ரோகித் ஷர்மா 44 ரன்களும், புஜாரா 25 ரன்களும், ரஹானே 37 ரன்களும், அகர்வால் 38 ரன்களும், ரிஷப் பன்ட் 23 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 62 ரன்களும், ஷர்துல் தாகுர் 37 ரன்களும் அடித்தனர்.

கடைசி கட்டத்தில் முகமது சிராஜ் 13 ரன்களை சேர்க்க, 336 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்தியா.

இதனையடுத்து, தனது இரண்டாவது இன்னிங்ஸை துவக்கிய ஆஸ்திரேலிய அணியில், டேவிட் வார்னரும், மார்கஸ் ஹாரிஸும் களமிறங்கினர். வார்னர் 20 ரன்கள‍ை அடித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணி, விரைவாக ரன்குவித்து இந்தியாவுக்கு பெரிய இலக்கை நிர்ணயிக்க முயலலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.