நாளை துவங்குகிறது பிரிஸ்பேன் டெஸ்ட் – இந்தியா ஆதிக்கம் செலுத்துமா?

பிரிஸ்பேன்: பல்வேறு சவால்களுக்கு மத்தியில், இந்தியா – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் நான்காவது டெஸ்ட், பிரிஸ்பேனில் நாளை தொடங்குகிறது.

இந்திய அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நடக்குமா? நடக்காதா? என்ற சந்தேகத்தில் இருந்த பிரிஸ்பேன் டெஸ்ட் ஒருவழியாக நாளை தொடங்குகிறது.

தற்போதைய நிலையில், 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில், 1-1 என்ற கணக்கில் தொடர் சமனில் உள்ளது. எனவே, நாளைய டெஸ்ட் போட்டி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.

இந்திய அணியில் பல முக்கிய வீரர்கள் கடுமையான காயத்தால் விலகியுள்ளார்கள். மேலும் பலர் காயத்தால் அவதிப்பட்டுள்ளார்கள். ஆனாலும், பெரிய நம்பிக்கையுடன் களமிறங்குகிறது இந்திய அணி. இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி வெல்லவில்லை என்றாலும்கூட, டிரா செய்தாலே சாதனைதான். ஏனெனில், இந்திய அணியின் நிலைமை தற்போது அப்படித்தான் உள்ளது.

நாளை அதிகாலை 5.30 மணிக்கு பிரிஸ்பேன் மைதானத்தில் துவங்குகிறது போட்டி.