ஒரேநாளில் 500க்கும் மேற்பட்டோரை கொரோனாவுக்கு பலிகொடுத்த பிரிட்டன்!

லண்டன்: பிரிட்டனில் முதன்முறையாக ஒரேநாளில் 563 பேர் கொரோனாவுக்கு பலியான சோகம் நடந்துள்ளது. அதாவது, அந்நாட்டில் ஒருநாளில் கோரோனா பலி 500ஐ தாண்டுவது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.

இதன்மூலம், அந்நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 2352 என்பதாக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனா பாதித்தவர்களின் பட்டியலில் 4324 பேர் புதிதாக இணைந்துள்ளனர்.

அந்நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. அந்நாட்டில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தடையுத்தரவு போடப்பட்டுள்ளது.

“இந்த கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் அடங்குவதற்குள் ஒரு ஆட்டம் ஆடிவிடும்” என்று கருத்து தெரிவித்துள்ளார் அந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அந்நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜான்சன்.

இந்த வைரஸ் அந்நாட்டு பட்டத்து இளவரசர் சார்லஸையும் தாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி