ண்டன்

ரோப்பிய நாடுகள் கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் விலக எடுத்த முடிவின் பாராளுமன்ற வாக்கெடுப்பில் பிரதமர் தெரசா மே தரப்பு தோல்வி அடைந்துள்ளது.

கடந்த 1973 ஆம் ஆண்டு முதல் ஐரோப்பாவில் உள்ள 28 நாடுகளின் கூட்டமைப்பில் பிரிட்டன் அங்கம் வகித்து வருகிறது. இந்த கூட்டமைப்பு ஐரோப்பா கண்டம் என்பது ஒரே நாடு என்னும் நிலைபாட்டுடன் இயங்கி வருகிரது. இதனால் பிரிட்டன் தனது தனித்துவம் மற்றும் இறையாண்மையை இழந்து விட்டதாக பிரிட்டன் மக்களில் ஒரு பகுதியினர் குற்றம் சாட்டி வந்தனர்.

ஆகவே கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிரிட்டன் அரசு இது குறித்து பொதுமக்களிடம் வாக்கெடுப்பு ஒன்றை நடத்தியது. பொதுமக்களில் பலர் இந்த பிரக்சிட் எனப்படும் பிரிட்டன் வெளியேற்றத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதைத் தொடர்ந்து பிரதமர் தெரசா மே ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் விலக தேவையான விதிமுறைகள் குறித்து வரைவு ஒப்பந்தம் வெளியிட்டார்.

இந்த வரைவு ஒப்பந்தத்தை எதிர்த்து தெரசா மே அமைச்சரவையில் இருந்து 6 அமைச்சர்கள் பதவி விலகினார்கள். வரும் மார்ச் மாதம் 29 ஆம் தேதிக்குள் பிரிட்டன் அரசு விலக இருந்த நிலையில் இது அரசுக்கு கடும் அதிர்ச்சியை உண்டாக்கியது. அமைச்சர்கள் கொண்டு வந்த வரைவு ஒப்பந்த எதிர்ப்பு தீர்மானம் பிரிட்டன் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

இதில் பிரக்சிட்டுக்கு ஆதரவாக 202 உறுப்பினர்களும் எதிராக 432 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்துள்ளனர். இதனால் தெரசா மே தரப்பு படு தோல்வி அடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து தெரசா மே மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கலாம் எனவும் அதில் அவர் தோல்வி அடைந்தால் அவர் அரசு கவிழ வாய்ப்புள்ளதாகவும் பிரிட்டன் அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.