ண்டன்

பிரிட்டனின் புதிய நீல நிற பாஸ்போர்ட்டை அச்சடிக்கும் பணி தற்போது பிரெஞ்சு – டச்சு கூட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.

கடந்த 1988 வரை பிரிட்டன் பாஸ்போர்ட்டுகள் நீல நிறத்தில் இருந்தன.   தற்போது அதே நீல நிறத்தில் பாஸ்போர்ட்டுகளை அச்சடிக்க பிரிட்டன் பிரதமர் தெரசா மே முடிவு செய்தார்.    அதையொட்டி இதற்காக பிரிட்டன் அரசு ஒப்பந்தப் புள்ளிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தது.   இந்த அழைப்பு சர்வதேச அளவில் விடுக்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே பிரிட்டன் பாஸ்போர்ட்டுகளை டி லா ரூ என்னும் நிறுவனம் அச்சிட்டு வந்தது.    இந்த நிறுவனத்தின் பெயர் பிரெஞ்சு மொழியில்  இருந்த போதிலும் இது ஒரு பிரிட்டிஷ் நிறுவனம் ஆகும்.    வடக்க் இங்கிலாந்து பகுதியில் இந்நிறுவனம் அமைந்துள்ளது.   பிரிட்டன் அரசு அச்சடிக்கும் கட்டணைத்தை வெகுவாக குறைத்ததினால் இந்த நிறுவனத்துக்கு தற்போது ஒப்பந்தம் கிடைக்கவில்லை.

தற்போது இந்த ஒப்பந்தம் ஜிமால்டோ என்னும் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதா பிரிட்டன் செய்தித்தாளான சன் நியூஸ்பேப்பர் தகவல் வெளியிட்டுள்ளது.   இந்த பிரெஞ்ச் – டச்சு கூட்டு நிறுவனம் இது குறித்து ஒப்புதல் அளிக்கவில்லை.   அதே நேரத்தில் இந்த செய்தியை மறுக்கவிம் இல்லை.

டி லா ரூ  நிறுவனத்தின் தலைமை அதிகாரி “அரசின் இந்த முடிவை எனது ஊழியர்களிடம் எப்படி சொல்லப் போகிறேன் என்பதே தெரியவில்லை.   பிரிட்டிஷ் அரசு பிரிட்டன் பாஸ்போர்ட்டை விட பிரெஞ்சு பாஸ்போர்ட்டை விரும்புகிறது.   ஆனால் இதனால் பல பிரிட்டிஷ் ஊழியர்கள் பாதிக்கப்படுவதை அரசு யோசிக்கவில்லை”  என கூறி உள்ளார்.

மேலும் அவர், “நான் பிரதமர் தெரசா மே அல்லது உள்துறை அமைச்சர் ஆம்பர் போன்ற அரசு பிரதிநிதிகளை எனது தொழிற்சாலைக்கு வருமாறு அழைக்கிறேன்.   அரசின் இந்த முடிவை பற்றி எனது தொழிலாளர்களுக்கு அவர்களே விவரிக்கட்டும்.    பிரிட்டனின் முக்கியமான ஆவணம் வெளிநாட்டில் அச்சடிப்பது ஏன் என்பதற்கான காரணத்தை அவர்களே சொல்லட்டும்”  என தெரிவித்துள்ளார்.