லண்டன்: உலகெங்கும் கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் கூறுகையில் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டிபிடிப்பது என்பது நடக்காத காரியம் என அவர் தெரிவித்துள்ளார்.
போரிஸ் ஜான்சன் கூறுகையில், “கொரோனாவின் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் நாம், இன்னும் பல கட்டங்களைத் தாண்ட வேண்டியுள்ளது. தற்போதுள்ள நிலையில் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது நடக்காத காரியம் எனவும், சமூக விலகல் மூலமாகவே கொரோனாவை சிறிதுசிறிதாக ஒழிக்க முடியும்” என்று அவர் கூறியுள்ளார்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் இம்பீரியல் கல்லூரி மருத்துவ மாணவர்கள் இணைந்து கொரோனா ஆய்வில் மும்மரம் காட்டுகின்றனர். இந்நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸனின் இந்த அவநம்பிக்கையான பேச்சு பிரிட்டன் குடிமக்களை சற்று கலக்கம் அடையச் செய்துள்ளது.
பிரிட்டன் பிரதமர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று, பின்னர் குணமடைந்து வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.