லண்டன்:

பிரிட்டன் நாடாளுமன்றத்தின் வெளியே பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலியானார்கள். பிரதமர் தெரசா உட்பட எம்.பிக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

பிரிட்டன் நாடாளுமன்றத்தின் வெளியே அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள்  இன்று திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.  வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கிச் சூடு பயங்கரவாதிகளில் ஒருவர் போலீசாரால் சுடப்பட்டுள்ளார்.

இதற்கிடையே நாடாளுமன்றத்தில் இருந்த பிரிட்டன் பிரதமர் தெராசா மே  உட்பட சுமார் 400 எம்பிக்களும் பாதுகாப்பாக இருப்பதாக அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. மேலும் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளார்களா என ஹெலிக்காப்டர் மூலம் பாதுகாப்பு படையினர் கண்காணித்து வருகிறார்கள்.