லண்டன்:

கேரட் என்பது உலகளவில் விரும்பி சாப்பிடும் காய் கிடையாது. ஆனால் பிரிட்டனில் கடந்த ஆண்டு மட்டும் 80 கோடி கேரட்களை விற்பனையாகியிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கேரட் அதிகளவு விற்பனையாகியிருப்பது பலருக்கு குழப்பதை ஏற்படுத்தியது. ஆனால், இதன் பின்னால் ஒரு கிரிமினல் நடவடிக்கை இருப்பதை கிரிமினாலஜிஸ்ட் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார். அதன் விபரம்…

லண்டன் பல்கலைக்கழக கிரிமினாலஜி துறை மூத்த பேராசிரியர் எமிலைன் டெய்லர் கூறுகையில், ‘‘சூப்பர் மார்க்கெட்டில் உள்ள சுய சேவை பிரிவில் வாடிக்கையாளர்கள் பலர் அதிகளவில் கேரட்களை வாங்கிச் சென்றுள்ளனர். ஆனால் உண்மை என்னவென்றால், கேரட் பெயரில் அதிக விலை உயர்வான பழங்கள் அல்லது அவகோடா போன்ற காய்கறிகளை வாடிக்கையாளர்கள் எடுத்து சென்றுள்ளனர். கேரட் விலை மலிவான காயாகும். சூப்பர் மார்க்கெட்டில் இதை தேர்வு செய்வதால் குறைந்த அளவு பில் போட்டுவிட்டு இதர காய்கறிகளை எடுத்துச் செல்வதன் மூலம் அதிகளவு பணம் மிச்சமாகியுள்ளது.

இந்த பழக்கம் முதலில் ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டது. சூப்பர் மார்க்கெட்டில் திருட்டை தடுப்பதற்காக நான் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு பெரிய சூப்பர் மார்க்கெட்டில் இருப்பை விட அதிகளவு கேரட்கள் விற்பனையானது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு வாடிக்கையாளர் 18 கிலோ கேரட் வாங்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரே நேரத்தில் அதிகளவு கேரட் சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியம £னது கிடையாது. இது ஒரு வகையான நூதன திருட்டு என்பது பின்னர் தான் தெரியவந்தது’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘இந்த நூதன திருட்டு பிரிட்டனில் சகஜமான ஒன்றாகிவிட்டது. இது குற்றம் என்பதை தெரியாமலே வாடிக்கையாளர்கள் செய்கின்றனர். பிரிட்டனில் உள்ள 50 ஆயிரம் சுய சேவை அங்காடிகளில் ஆண்டுதோறும் 300 கோடி யூரோ மதிப்பிலான இது போன்ற திருட்டு நடந்து வருகிறது. 4 பேரில் ஒருவர் குறைந்தபட்சம் ஒரு பொருளை அதற்குறிய விலையை செலுத்தாமல் எடுத்துச் செல்கின்றனர். கடந்த 4 ஆண்டுகளில் ஆளில்லாத வெளியேறும் கவுன்ட்டர்களில் இந்த நிலை இரட்டிப்பாகி உள்ளது என்று ஒரு சர்வே முடிவு தெரிவித்துள்ளது.

காசாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை மிச்சப்படுத்துவதற்காக இந்த முறை 1990ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. சில வருடங்களாக இது அனைத்து இடங்களுக்கும் பரவிவிட்டது. இதன் அறிமுகத்திற்கு பின்னர் திருட்டு மூலம் ஏற்படும் சராசரி நஷ்டத்தின் அளவு இரட்டிப்பாகியுள்ளது. பைன் கொட்டைகளை விட நிலக்கடலைகள் விலை மலிவானது. கொடி தக்காளியை சமைக்கும் தக்காளி விலை மலிவு. இதர பழங்கள் மற்றும் காய்கறிகளோடு ஒப்பிடுகையில் கேரட் எடை அடிப்படையில் மலிவானது.

அதனால் பல வாடிக்கையாளர்கள் லேபிள்களை மாற்றியோ அல்லது வேண்டுமென்றே இதர பொருட்களோடு விலை உயர்ந்த பொருட்களை சேர்த்து வைத்துவிடுகின்றனர். இவர்கள் ‘‘தள்ளுபடி திருடர்கள்’’ வகையை சேர்ந்தவர்கள். இவர்களது செயல்பாடு திருட்டில் சேராது. இவர்கள் நடைமுறையை ஏமாற்றுபவர்கள்.
அனைத்து குற்றங்களும் பணத்துக்காக செய்வது கிடையாது. சில சில்லரை திருட்டுக்கள் உள்ளூர காரணங்களுக்காக செய்யப்படுகிறது. ஸ்கேனில் வராத காரணத்தால் சிலர் ஒரு பொருளை திருடியாக கூறுகின்றனர். திருடி சிக்கும் சிலர் தெரியாமல் திருடி விட்டதாக கூறுகின்றனர். சிலருக்கு இது பழ க்கமாகிவிட்டது.

பொருட்களின் லேபில்களை மாற்றுவது அல்லது மற்ற பொருட்களோடு கலந்துவிடுவது போன்ற திருட்டில் ஈடுபடுபவர்கள் இதை உண்மையான திருட்டாக நினைப்பதில்லை. இதற்கு காரணம் குறிப்பிட்ட ஒரு அளவு தொகையை அவர்கள் செலுத்திவிடுகிறார்கள். ஏற்கனவே ஒரு பொருளை வாங்கிய போது இழந்த நஷ்டத்தை ஈடு செய்வதற்காக திருடுகின்றனர். அதிக லாபம் ஈட்டுவதால் சுயசேவை பிரிவை நடத்துகின்றனர். அதனால் அவர்களிடம் திருடுவதாக சிலர் காரணம் கூறுகின்றனர்.

பார் கோடு அழிந்திருத்தல் அல்லது சரியான பழம் அல்லது காய்கறியை தேர்வு செய்ய தெரியவில்லை போன்ற காரணங்களால் ஏற்படும் அறியாமை திருட்டுக்கு மன்னிப்பு அளிக்கப்படுகிறது.