மான்செஸ்டர்

ந்த மாதம் 31 ஆம் தேதியில் இருந்து ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் என அந்நாட்டின் நிதி அமைச்சர் ஜாவித் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து விலகுவதாக பிரதமர் தெரசா மே ஆட்சிக்காலத்தில் முடிவு எடுக்கப்பட்டது.  இதையொட்டி கருத்துக் கணிப்பு தேர்தலில் மக்கள் விலகுவதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.   ஆயினும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த மசோதா தோல்வி அடைந்ததையொட்டி தெரசா மே பதவி விலகினார்.

அவருக்கு பிறகு பிரதமர் பதவியில் அமர்ந்த போரிஸ் ஜான்சன் ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பில் இருந்து விலகுவதில் தீவிரம் காட்டி வந்தார்.   இவருக்கு எதிர்ப்பு எழுந்தது.   உறுப்பினர்கள் ராஜினாமாவால் பெரும்பான்மை இழந்த போரிஸ் ஜான்சன் நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் இங்கிலாந்து உயர்நீதிமன்றம் போரிஸ் ஜான்சனுக்கு கண்டனம் தெரிவித்தது.   அவர் உத்தரவு ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் நிதி அமைச்சர் ஜாவித் செய்தியாளர்களிடம் வரும் 31 ஆம் தேதியில் இருந்து ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து விலகும் என தெரிவித்துள்ளார்.  ஒரு நல்ல ஆதாயத்துடன் இங்கிலாந்து வெளியேற வாய்ப்புள்ளதாகவும், அப்படி இல்லை என்றாலும் இங்கிலாந்து வரும் 31 ஆம் தேதி விலகுவது உறுதி எனவும் அவர் கூறினார்.