Random image

மீண்டும் பிரிட்டன் – இந்திய விமான சேவை இன்று முதல் தொடக்கம்

டில்லி

ன்று முதல் கொரோனா அச்சத்தால் நிறுத்தப்பட்ட பிரிட்டன் – இந்தியா விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இந்தியா 2 ஆம் இடத்தில் உள்ளது.  பல ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் இரண்டாம் அலை தொடங்கி உள்ள நிலையில் பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் காணப்பட்டது.

வழக்கமான கொரோனா வைரஸைப் போல் பன்மடங்கு வீரியம் கொண்ட இந்த உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் வேகமும் மிகவும் அதிகமாகும்.  எனவே உலக நாடுகள் அச்சம் கொண்டு பிரிட்டனுடனான விமான சேவைகளை நிறுத்திக் கொண்டன.

இதன் அடிப்படையில் கடந்த 23 ஆம் தேதி அன்று உருமாறிய கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்தியா மற்றும் பிரிட்டன் இடையில் ஆன விமான சேவை நிறுத்தப்பட்டது.  இன்னும் உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் பிரிட்டனில் மேலும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இந்தியா மற்றும் பிரிட்டன் இடையிலான விமான சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.  உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் வேளையில் வெளி வந்துள்ள இந்த தகவலால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.