இங்கிலாந்து இளவரசர் ஹாரிக்கு நிச்சயதார்த்தம்

ண்டன்

ங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மெகன் மார்க்லே இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

இங்கிலாந்து நாட்டின் இளவரசர்களில் ஒருவர் ஹாரி.  அரசுப் பீடத்தில் அமர ஐந்தாம் இடத்தில் உள்ள இவருக்கு வயது 33 ஆகிறது.  இவருடைய நிச்சயதார்த்தச் செய்தி அரண்மனை டிவிட்டர் குறிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் “இளவரசர் ஹாரிக்கும் மெகன் மார்க்லேவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.  இவர்கள் திருமணம் வரும் 2018 ஆம் வருடம் வசந்த காலத்தில் நடைபெறும்.  அவர்கள் இருவரும் ராணி மற்றும் குடும்பத்தின் ஆசிகளையும் மார்க்லேவின் பெற்றோரின் ஆசிகளையும் பெற்றுள்ளனர்.  இந்த மாதம் நிச்சயதார்த்தம் செய்துக் கொண்ட இருவரும் திருமணத்துக்குப் பின் கென்சிங்டன் அரணமையில் வசிப்பார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may have missed