ண்டன்

பாதுகாப்பு காரணமாக கெய்ரோ விமானச் சேவைகள் நிறுத்துப்பட்டுள்ளதாகப் பிரிட்டிஷ் ஏர்வேஸ் மற்றும் லுஃப்தன்சா ஆகிய நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியதிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையே அமைதியற்ற நிலை உள்ளது. ஈரானுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. அது மட்டுமின்றி பல நாடுகளுக்கு ஈரானுடன் எண்ணெய் வர்த்தகம் செய்யக் கூடாது என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் போர் அபாயம் மூளலாம் என்னும் அச்சம் நிலவி வருகிறது.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஹோர்முஸ் முகத்துவாரத்தில் சென்று கொண்டிருந்த பிரிட்டன் கொடியை ஏந்தி சென்ற ஒரு எண்ணெய் கப்பலை ஈரான் சிறை பிடித்துள்ளது. இதனால் அந்த பகுதியில் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த முகத்துவாரம் ஈரான் நாட்டின் கெய்ரோ நகரிலிருந்து சுமார் 2500 கிமீ தொலைவில் உள்ளது.

நேற்று பிரிட்டன் நாட்டின் விமானச் சேவை நிறுவனமான பிரிட்டிஷ் ஏர்வேஸ் மற்றும் ஜெர்மனி நாட்டின் லுஃப்தன்சா ஆகிய நிறுவனங்கள் கெய்ரோ நகருக்குச் சேவைகள் நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளன. இது குறித்து பிரிட்டிஷ் ஏர்வேச் நிறுவனம் இது அனைத்து விமான நிலையங்களிலும் உள்ள பாதுகாப்பு குறித்த சோதனைக்காக முன்னெச்சரிக்கை  நடவடிக்கையாக நிறுத்தபட்டுள்ள்தாக தெரிவித்துள்ளது. லூஃப்தன்சாவும் அதே காரணத்தைத் தெரிவித்துள்ளது.