கார் பந்தயம் – மீண்டும் சாம்பியன் ஆனார் லீவிஸ் ஹாமில்டன்!

லண்டன்: பிரிட்டிஷ் ‘ஃபார்முலா 1’ கார் பந்தயத்தில் மெர்சிடஸ் அணியின் லீவிஸ் ஹாமில்டன் சாம்பியன் பட்டத்தை வென்றார். இவர், தொடர்ந்து பல பட்டங்களை வென்று வருவது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தில், நடப்பாண்டின் 4வது சுற்று கிராண்ட் பிரிக்ஸ் ஃபார்முலா 1 கார்ப்பந்தயம் நடைபெற்றது. இதில், மொத்தம் 10 அணிகள் பங்கேற்றன. வீரர்களின் கணக்கில் மொத்தம் 20 பேர் கலந்துகொண்டனர்.

மொத்தம் 306.198 கி.மீ. தூரம் கொண்ட பந்தய தொலைவை, 1 மணிநேரம் 24 நிமிடம் மற்றும் 303 விநாடியில் கடந்து முதலிடம் பிடித்தார் மெரிசிடஸ் அணியில் இடம்பெற்றிருந்த லீவிஸ் ஹாமில்டன்.

இவர், இந்த சாம்பியன் பட்டத்தை வெல்வது இது 7வது முறையாகும். இந்த சீசனில் மட்டும் இது இவரின் 3வது சாம்பியன் பட்டமாகும். ஒட்டுமொத்தமாக, இது இவரின் 87வது சாம்பியன் பட்டமாகும்.