காஷ்மீர் குறித்து சர்ச்சை பேச்சு: இங்கிலாந்து எம்.பி. டெபி ஆபிரஹாம் இந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுப்பு!

டெல்லி:

பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினரும் காஷ்மீருக்கான அனைத்து கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவருமான டெபி ஆபிரகாம்க்கு இந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அவரை திருப்பி அனுப்ப அரசு முயற்சி எடுத்துள்ளது.

இன்று காலை 8:50 மணியளவில் டெல்லி விமான நிலையத்திற்கு வந்த இங்கிலாந்து எம்.பி, டெபி ஆபிரஹாம் விமான நிலைய அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். அவருக்கு  2020 ஆண்டு அக்டோபர் வரை செல்லத்தக்க இ-விசா இருந்த நிலையில், அவர் தடுத்து நிறுத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இங்கிலாந்து நாட்டின் தொழிலார் கட்சி எம்.பியான  இவர் காஷ்மீருக்கான அனைத்து கட்சி நாடாளு மன்றக் குழுவின் தலைவராக இருந்து வருகிறார். காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து விமர்சனம் செய்திருந்தார். இதையடுத்து, அவரை இந்தியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து இந்திய அரசின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்துள்ள  டெபி ஆப்ரஹாம், விமான நிலையத்தில்  மற்றவர்களைப்போலவே எனது விசாவையும் முன்வைத்தேன்,  ஆனால், அதிகாரிகள் என புகைப்படத்தை கணினி திரையில் பார்த்தவுடன், தன்னை இந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுத்து விட்டனர்.

முதலில் எனது பாஸ்போர்டை காணவில்லை என்ற தெரிவித்த நிலையில், சுமார் 10 நிமிடம் கழித்து தன்னிடம் அதிகாரிகள் முரட்டுத்தனமாக நடந்துகொண்டதாகவும், தன்னுடன் வரும்படி கோபத்துடன் கூறி அழைத்துச் சென்றனர், தான், என்னிடம் அவ்வாறு நடந்து கொள்ள வேண்டாம் என்று கூறியதாகவும், ஆனால், அவர்கள் தன்னை நாடு கடத்தப்படும் நபர்களுக்கான அறைக்குள்  அழைத்துச் சென்று அமர வைத்தனர் என்று தெரிவித்து உள்ளார்.

அவர்கள் என்னை எங்கே அழைத்துச் செல்லப்போகிறார்கள், என்று  எனக்குத் தெரியவில்லை, மக்கள் என்னைப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்பினேன் என்று தெரிவித்துள்ளார், இப்போது நான் நாடு கடத்தப்படுவதற்குக் காத்திருக்கிறேன் .. இந்திய அரசின் மனதில் மாற்றம் இல்லாவிட்டால். நான் ஒரு குற்றவாளியைப் போலவே நடத்தப்படுகிறேன் என்றும்த, எனது குடும்பத்தினரையும் நண்பர்களையும் பார்க்க என்னை அனுமதிப்பார்கள் என்று நம்புகிறேன்.

இவ்வாறு தெரிவித்து உள்ளார்.