லண்டன்:

ண்டன் ஓவல் மைதானம் வாசலில் நமது நாட்டின் ஸ்டைலில், பொரி, சுண்டல், கடலை விற்பனை செய்து கல்லா கட்டினார் பிரிட்டன்காரர் ஒருவர். இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இது தொடர்பான வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நமது நாட்டில் மக்கள் கூடும் இடங்களில், பொரி, சுண்டல், கடலை போன்ற விற்பனை நடைபெறு வது வழக்கமானது. அது கடற்கரை, பொருட்காட்சிகள்  மட்டுமின்றி அரசியல் கூட்டங்களிலும் இந்த நொறுக்குத்தீனி விற்பனை படுஜோராக நடைபெற்று வருவது வழக்கம்.

இந்த நிலையில் நமது விற்பனையை முறையை காப்பியடித்து, லண்டனிலும் பிரிட்டன்காரர் ஒருவர்  கடைவிரித்து கல்லா கட்டியுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டன் ஓவல் மைதானத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா இடையே உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டி நடைபெற்றது.  உலகம் முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த போட்டியை காண உலகம் முழுவதும் இருந்து இந்தியார்கள் லண்டனில் குவிந்தனர்.

இதை நல்வாய்ப்பாக கருதிய பிரிட்டன்கார் ஒருவர்,  லண்டன் ஓவல் மைதானம் வாசலில் ‘இந்தியன்’ ஸ்டையில் பொரி, கடலையை விற்பனை  செய்தார். இது அங்கு வந்த மக்களிடையே  நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அவரது விற்பனையும் படுஜோராக நடைபெற்றது…