லண்டன்:

மெரிக்க உளவு அமைப்பான சிஐஏவின்  ரகசியங்களை வெளியிட்டு கடந்த 2010ம் ஆண்டு பரபரப்பு ஏற்படுத்தியது விக்கி லீக்ஸ் என்று புலனாய்வு இணையதள நிறுவனம். அதன் தலைவராக ஜூலியன் அசாஞ்சே இருக்கிறார்.  இவரை கைது செய்ய அமெரிக்கா பகீரத பிரயத்தனம் செய்து வந்தது.

இதன் காரணமாக கடந்த 8 ஆண்டுகளாக  தலைமறைவாக இருந்து வந்த  விக்கி லீக்ஸ் நிறுவனர் அசாஞ்சே,  தற்போது பிரிட்டிஷ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் சி.ஐ.ஏ பற்றிய ரகசிய தகவல்களை வெளியிட்டு உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் விக்கிலீக்ஸ் இணைய தள நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே. ‘Vault 7’ என்ற பெயரில், அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ பற்றிய  8 ஆயிரத்து 761 ஆவணங்களை  கடந்த 2010ஆம் ஆண்டு அசாஞ்சே வெளியிட்டார்.  அதனால் உலக அளவில் கடும் பரபரப்பு ஏற்பட்டது.   அமெரிக்க அரசு இவரைக்  கைது செய்ய முயன்றதால் இவர் அங்கிருந்து வெளியேறி னார்.வெளியிட்டது. அத்துடன் சிஐஏ-வின் ரகசிய ஹாக்கிங் திட்டத்தைப் பற்றிய 8,761 ஆவணங் கள் வெளியிட்டது.

இது அமெரிக்காவுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது. இந்தளவு ரகசியங்கள் கசிந்த து இதுதான் முதல்முறை  என்றும் கூறப்பட்டது. இதன் காரணமாக அசாஞ்சே மீது அமெரிக்கா கொலைவெறியில் இருந்து வந்தது.

பின்னர் அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பான ஆவணங்களையும் வெளியிட இருப்பதாக மிரட்டி வந்த அசாஞ்சே,  கடந்த 2016ம் ஆண்டு, தனது நிறுவனத்தின் 10ஆண்டுகள் நிறைவடைவதை யொட்டி ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகரில் இருந்து காணொளி காட்சி வழியாக மேலும் பல ஆவணங்களை வெளியிட்டார்.

அந்த ஆவணங்களில் ஆப்பிள் ஐபோன், கூகுளின் ஆண்ட்ராய்ட், சாம்சங் டிவி-க்கள், விண்டோஸ் போன்றவற்றை ஹாக் செய்து ரகசிய மைக்ரோபோனாகப் பயன்படுத்தும் அளவுக்கு சிஐஏ திட்ட மிட்டிருந்ததை விக்கிலீக்ஸ் உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டியது. இதையடுத்து அவரை கைது செய்ய உலகம் முழுவதும் வலைவிரித்து கண்காணித்து வந்தது அமெரிக்கா.

ஆனால், அசாஞ்சே அமெரிக்காவின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு வெளிநாடுகளில் தலை மறைவாக இருந்து வந்தார். சமீபத்தில் ஈக்வடார் நாட்டின் குடியுரிமை பெற்றதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் ஜூலியன் அசாஞ்சே பிரிட்டிஷ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஜூலியன் அசாஞ்சே ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.