லண்டன்:

பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான இங்கிலாந்து அமைச்சரவையில், பிரபல சாப்ட்வேர் நிறுவனமான இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மருமகன் நிதி அமைச்சராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

இங்கிலாந்து நாட்டின் நிதி அமைச்சராக இன்ஃபோசிஸ் நிறுவனர் திரு நாராயண மூர்த்தி அவர்களின் மருமகன் ரஷி சுனக் (Rishi Sunak)   ரிஷி சூனக் நியமிக்கப்பட்டுள்ளார். ரிஷி சுனக் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டிஷ் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த  அரசியல்வாதியான ரிஷி சூனக் 1980ம் ஆண்டு பிறந்தவர். ரிஷிக்கு வயது  39 . கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று, தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். கடந்த 2019ம் ஆண்டு  ஜூலை முதல் தற்போது வரை கருவூலத்தின் தலைமை செயலாளராக  பணியாற்றி வருகிறார். இன்று அவரை நிதி அமைச்சராக பிரதமர் போரிஸ் ஜான்சன் நியமனம் செய்துள்ளார்.