ரிலையன்ஸ் நிறுவனமும் போர் உபகரணங்களும் : பிளாக்கர்

டில்லி

ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.63000 கோடி மதிப்பிலான போர் உபகரணங்கள் செய்ய திறன் உள்ளதா என்பது குறித்து நெட்டிசன் ஒருவர் தனது வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி உள்ளார்.

பிரபல வலைத்தளமான பிராட்ஸ்வார்ட் (BROADSWORD) ரிலையன்ஸ்  நிறுவனத்தின் திறன் குறித்து அஜித் சுக்லா என்பவர் பிசினெஸ் ஸ்டாண்டர்ட் இதழில் வெளியிட்டுள்ள கட்டுரையை அடிபடையாகக் கொண்டு செய்தி ஒன்றி வெளியிட்டுள்ளது.

அந்த செய்திக் கட்டுரையில்,

”நேற்று கடற்படைக்கு தேவையான இரு சிறு கப்பல்கள் அமைக்க ஒப்பந்தம் இடப்பட்டது.   அந்த ஒப்பந்தம் கோரி ரிலையன்ஸ் நிறுவனம் விண்ணப்பித்திருந்தது.   ஆயினும் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் கட்டுமானத் திறன் குறைவு என காரணம் காட்டி அந்த ரூ.2000 கோடிக்கான ஒப்பந்தம் இந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட்க்கு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு சிறிய அளவிலான ஒப்பந்தம் பெற திறன் இல்லை என தீர்மானிக்கபட்ட ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 63000 கோடி மதிப்பிலான போர் உபகரணங்கள் செய்யும் திறன் உள்ளதா என்பதை எவ்வாறு பாதுகாப்புதுறை அமைச்சகம் கண்டறிந்தது என தெரியவில்லை.

அது மட்டுமின்றி ஏற்கனவே ஏபிஜி  நிறுவனத்துக்கு அளிக்கப்ப்பட்ட ஒரு பாதுகாப்புத் துறை ஒப்பந்தம் அந்த நிறுவனத்தின் நிதி நிலை சரியில்லாததால் ரத்து செய்யப்பட்டது.  அதே நேரத்தில் விஜயா வங்கியில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட கடன் வாராக்கடன் என அறிவிக்கப்பட்ட போதிலும் பாதுகாப்புத் துறை எவ்வாறு புதிய ஒப்பந்தம் ஒன்றை அளித்தது என்பதும் தெரியவிலை.

கடந்த 2014 ஆம் ஆண்டு கடற்படை பணிக்காக மூன்று நிறுவனங்கள் ஒப்பந்தப் புள்ளிகள் அளித்திருந்தன.  அந்த ஒப்பந்தப் புள்ளியின் அடிப்ப்படையில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு இரு கப்பல்களும் ஏபிஜி நிறுவனத்துக்கு இரு கப்பல்களும் செய்ய ஒப்பந்தம் இடப்பட்டது.   அந்த ஒப்பந்தம் தான் மேலே குறிப்பிட்ட ரத்து செய்யப்பட்ட ஒப்பந்தமாகும்.

அதன் பிறகு 2017 ல் அதற்காக மறு ஒப்பந்தப் புள்ளி வெளியிடப்பட்டது.  அப்போது முன்பு போட்டியிட்ட எல் அண்ட் டி மற்றும் ரிலையன்ஸ் நிறுவனம் மட்டுமே ஒப்பந்தப் புள்ளிகள் அளித்தன.  அந்த புள்ளிகள் பல நாட்களாகியும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளன.”

என தெரிவிக்கபட்டுள்ளது.