சிறையில் சசிகலாவை, ‘இரட்டை இலை’ வழக்கு தரகர் பிரகாஷ் சந்தித்தார்! ரூபா அதிர்ச்சி தகவல்

பெங்களூரு,

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக அம்மா அணி துணைப்பொதுச்செயலாளரான சசிகலாவை, இரட்டை இலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தரகர் பிரகாஷ் சந்தித்து தெரிய வந்துள்ளது.

இதன் காரணமாக இரட்டை இலை வழக்கு மேலும் சூடுபிடித்துள்ளது. டிடிவி தினகரனுக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா சிறை அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்து, சிறையில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ள தகவல்கள்  சரமாரியாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.

டிஐஜி ரூபா நடத்திய அதிரடி சோதனையின் காரணமாக சசிகலா குறித்த ஏராளமான தகவல்கள் தினசரி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், தேர்தல் கமிஷனால் முடக்கப்பட்ட இரட்டை இலையை தனது அணிக்கு பெற்றுத்தர தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக  வழக்கில், டிடிவி தினகரனி டம் இருந்து கோடிக்கணக்கான லஞ்ச பணத்தை பெங்களூர் நண்பர் நாகார்ஜூனா மூலம், தரகர் பிரகாஷ் வழியாக, டில்லி புரோக்கர் சுகேஷ் சந்திராமூலம் கொடுக்க முயன்றதாக கைது செய்யப்பட்டனர்.

இந்த தரகர் பிரகாஷ் சிறையில் சசிகலாவை சந்தித்து பேசியது தெரிய வந்துள்ளது. டிஐஜி ரூபா வெளியிட்டுள்ள தகவலில்,

‘சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலாவை, தினகரனின் நண்பர் மல்லிகார்ஜூனாசந்தித்ததாக தெரியவில்லை, ஆனால், பெங்களூரைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் சசிகலாவை சந்தித்துள்ளதாக எனக்கு நம்பிக்கையான தகவல் கிடைத்ததுள்ளதாக பரபரப்பு தகவல்களை வெளியிட்டு உள்ளார்.

தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு பணம் கொடுத்ததாக கைது செய்யப்பட்டவர் தரகர் பிரகாஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதன் காரணமாக டிடிவி தினகரனுக்கு இரட்டை இலை வழக்கில் மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.