பத்திரப்பதிவில் இடைத்தரகர்கள் அட்டூழியம்: பதிவுத்துறை ஐஜி அதிரடி உத்தரவு!

சென்னை,

மிழகத்தில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் இடைத்தரகர்கள் குறுக்கிட்டால், அந்த அலுவலகத்தின் சார்பதிவாளர் சஸ்பெண்டு செய்யப்படுவார் என்று பதிவுத்துறை ஐஜி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகத்திலே அதிக அளவு லஞ்ச லாவண்யம் நடைபெற்று வரும் அரசு அலுவலங்களில் முதன்மையானது பத்திரப்பதிவு அலுவலகம். இந்த  பத்திரப்பதிவு அலுவலகங்களில் புரோக்கர்கள் குறுக்கீடு அதிக அளவில் இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு வருகிறது.

இந்த புரோக்கர்கள் மூலமே சொத்துக்கள் விற்பனை, தானம், ஒப்பந்தம் போன்ற பதிவுகள் நடைபெற்று வருகிறது. இவர்களுடன் அந்த அலுவலக  ஊழியர்கள் மட்டும் சார்பதிவாளர் கூட்டணி வைத்துக்கொண்டு, ஆவனங்கள் பதிவு செய்ய அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் தவிர அதிக அளவு பணம் லஞ்சமாக வாங்கி வருகிறார்கள்.

இதன் காரணமாக சாமானிய மக்கள் தங்களது சொத்துக்களை விற்கவோ, வாங்கவோ பத்திர பதிவு செய்ய இயலாமல் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகி வருகிறார்கள்.

இதுகுறித்து ஏராளமான புகார்கள் வந்ததை தொடர்ந்து, தமிழக பத்திரப்பதிவு துறை ஐஜி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அதில்,  பத்திரப்பதிவு அலுவலக பணிகளில் இடைத்தரகர்கள் குறுக்கிட்டால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். அலுவலகத்தில் வெளியாட்கள் பணிபுரிவது தெரியவந்தால் சார்பதிவாளர்கள் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.