காதல் திருமணம் செய்த பெண்ணின் கணவருக்கும் மாமியாருக்கும் அரிவாள் வெட்டு.

துரை

ங்கை காதல் திருமணம் புரிந்ததால் அவரது கணவரையும் மாமியாரை அரிவாளால் வெட்டிய அண்ணனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மதுரை நகரில் சந்தைப்பேட்டை என்னும் பகுதியில்  பொன்ராஜ் என்னும் கால்டாக்சி ஓட்டுனர் வசித்து வருகிறார்.    அதே பகுதியில்  செல்வ மீனாட்சி என்னும் இளம்பெண் வசித்து வருகிறார்.   இவர்கள் இருவருக்கும் கடந்த 4 வருடங்களாக காதல் உள்ளது.   இவர்கள் காதலுக்கு செல்வமீனாட்சியின் குடும்பத்தில் கடும் எதிர்ப்பு இருந்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை  செல்வமீனாட்சியின் வீட்டாரை எதிர்த்து பொன்ராஜ் அவரை திருமணம் செய்துக் கொண்டார்.   இருவரும் அதே சந்தைப்பேட்டை பகுதியில் தனியாக ஒரு வாடகை வீட்டில் தங்கி உள்ளனர்.    இந்த திருமணத்தால் செல்வமீனாட்சியின் அண்ணன் பிரபாகர் கடும் கோபம் அடைந்துள்ளார்.

அவர் நேற்று தனது தங்கையின் வீட்டுக்கு ஆட்களுடன் சென்றுள்ளார்.  அப்போது அங்கு இருந்த பொன்ராஜ் மற்றும் அவரது தாயார் ஆகியோரை அரிவாளால் அவர்கள் சரமாரியாக வெட்டி உள்ளனர்.   அவர்கள் இறந்து விட்டதாக நினைத்து அங்கிருந்து அந்த கும்பல் தப்பி சென்று விட்டது.

இந்த அரிவாள் வெட்டால் தாயும் மகனும் படுகாயம் அடைந்துள்ளனர்.   அவர்கள் இருவரும் அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.    இது குறித்து மதுரை தெப்பக்குளம் காவல்நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.  அந்த காவல்நிலைய காவலர்கள் பிரபாகரையும் அவர் ஆட்களையும் தேடி வருகின்றனர்.

You may have missed