டில்லி

லகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான் புருனே அரசர் தனது விமானத்தை தானே செலுத்தி டில்லிக்கு வந்துள்ளார்.

ஓரளவு பணக்காரரான ஆணோ பெண்ணோ தங்கள் வாகனத்தை தாங்கள் செலுத்துவதில்லை.    வாகனம் செலுத்த அவர்கள் ஓட்டுனர்களை பணியில் அமர்த்துகின்றனர்.  இது இந்தியாவில் மட்டும் அல்ல பல உலக நாடுகளில் இதே முறைதான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது

இந்நிலையில் உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான புருனே அரசர் தனது விமானத்தை தானே செலுத்தி உள்நாடு மற்றும் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்கிறார்.   இன்று தொடங்கி உள்ள ஏசியன் மாநாட்டில் கலந்துக் கொள்ள அவ்வாறு டில்லிக்கு தனது போயிங் 747-400 விமானத்தை செலுத்திக் கொண்டு வந்து இறங்கி உள்ளார்.   அவர் இவ்வாறு வந்தது விமான நிலையப் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளிடையே வியப்பை உண்டாக்கி உள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு மோடி பிரதமாராக பதவி ஏற்ற பின் புருனே அரசர் முதல் முறையாக டில்லிக்கு வருகிறார்.     உள்நாட்டு பயணத்துக்கு ஒரு விமானமும்,  வெளிநாட்டுப் பயணத்துக்கு வேறு விமானமும் வைத்திருக்கும் அரசர் விமானம் மட்டுமின்றி தன்னிடம் உள்ள கார்களையும் அவரே செலுத்திக் கொண்டு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.    அவரிடம் உள்ள மொத்த கார்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.