தமிழ் ஓடிடி செயலி பிஎஸ் வேல்யூ அறிமுகம்…..!

தமிழ் கிரியேட்டர்களால் உருவாக்கப்பட்ட தமிழின் பிரத்யேக ஓடிடி-யானபிஎஸ் வேல்யூ, பிளாக் ஷீப்விண்ணுக்கும் மண்ணுக்கும் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், இந்தியாவிலேயே முதன்முறையாக விண்ணில் அறிமுகப்படுத்தப்படும் முதல் பிராண்டு; உலகிலேயே முதல் முறையாக 1 லட்சத்து 10 ஆயிரம் மரங்களோடு யூ-டியூபர்களோடு உருவாக்கப்படும் முதல் மக்கள் முதலீட்டு காடு; நவம்பர் 2-ம் தேதி முதல் நவம்பர் 6-ம் தேதி வரை 110 மணிநேர தொடர் நேரலை ஆகிய 3 சாதனை முயற்சிகளை நிறைவேற்ற பிளாக் ஷீப் குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.

இந்த நிகழ்வில் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், நடிகர் சிவகார்த்திகேயன், பிரியா பவானிசங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பிஎஸ் வேல்யூ செயலி தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே சுமார் 2 லட்சம் டவுன்லோடுகள் செய்யப்பட்டுள்ளன. 2017-ம் ஆண்டு வலையொலியில் ஒரு சிறு சேனலாகத் தொடங்கப்பட்ட பிளாக் ஷீப், இன்று 50 லட்சத்துக்கும் அதிகமான சந்தாதாரர்களோடு 6 யூ-டியூப் சேனல்களை நடத்தும் நிறுவனமாக வளர்ந்துள்ளது.

 

You may have missed