காதல் மோகத்தால் நேர்ந்த விளைவு: ராணுவ ரகசியங்களை பாக்கிஸ்தானிற்கு பகிர்ந்த வீரர் கைது

பாக்கிஸ்தானை சேர்ந்த உளவாளியுடன் ஏற்பட்ட காதலால் இந்திய ராணுவ ரகசியங்களை பாக்கிஸ்தானுக்கு பகிர்ந்த பதுகாப்புப்படை வீரர் கைது செய்யப்பட்டார்.

jawan

மத்தியப் பிரதேச மாநிலம், ரேவா மாவட்டத்தைச் சேர்ந்தவர் அச்சுதானந்த் மிஸ்ரா. இவர், உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில், எல்லைப் பாதுகாப்பு படைப்பிரிவில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், மிஸ்ராவிற்கும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் இடையில் நட்பு ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

இந்த காதல், காரணமாக பாகிஸ்தான் பெண்ணுடன் தான் பணியாற்றும் இடம், அங்கு நடக்கும் கூட்டங்கள் பற்றிய தகவல்களை அவ்வபோது அந்த பெண்ணிடம் கூறி வந்துள்ளார் மிஸ்ரா. இதற்கிடையில், ஒவ்வொரு வீரர்களின் செயல்பாடுகளையும், உத்திரப்பிரதேச மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது தான் மிஸ்ராவின் வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் தகவல் பரிமாற்றங்களை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதையடுத்து, ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கசியவிட்ட காரணத்திற்காக பாதுகாப்பு படைவீரர் மிஸ்ரா கைது செய்யப்பட்டார். இதையடுத்து மிஸ்ராவிடம் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில், அவருடன் தொடர்பில் இருந்த பெண், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. ஏஜெண்ட் என்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

கார்ட்டூன் கேலரி