டில்லி

ரசு நிறுவனங்களான பி எஸ் என் எல் மற்றும் எம் டி என் எல் நிறுவன ஊழியர்களின் விருப்ப ஓய்வு திட்டம் அரசு பரிசிலனையில் உள்ளது.

அரசு தொலை தொடர்பு நிறுவனங்களான பி எஸ் என் எல் மற்றும் எம் டி என் எல் நிறுவனங்கள் கடும் நஷ்டத்தில் உள்ளன.  கடந்த 2017-18 ஆம் வருடத்தில் மட்டும் பி எஸ் என் எல் நிறுவனம் ரூ. 27,818 கோடி வருமானம் பெற்று ரூ.8,000 கோடி நஷ்டத்தில் உள்ளது.    எம் டி என் எல் நிறுவனம் ரூ. 2,372 கோடி வருமானம் பெற்று ரூ.3,000 கோடி நஷ்டத்தில் உள்ளது.

இதை ஒட்டி ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை கொண்டு வர இரு நிறுவனங்களும் முடிவு செய்துள்ளன.   இதன்படி 50 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்கள் அவர்களாக விரும்பி விருப்ப ஓய்வு பெறலாம்.   அவர்களுக்கு இதுவரை பணி புரிந்த வருடங்களில் வருடத்துக்கு 35 நாள் ஊதியமும் இனி ஓய்வு வரை பணி புரிய உள்ள வருடங்களில் வருடத்துக்கு 25 நாள் ஊதியமும் இழப்பீடாக வழஙக உள்ளது.

அத்துடன் இந்த திட்டம் ஊழியர்கள் விரும்பினால் மட்டுமே அளிக்கப்படும் எனவும் யாரையும் கட்டாய ஓய்வு பெற நிறுவனங்கள் வற்புறுத்தாது எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.   இந்த திட்டம் குறித்து  இரு நிறுவன உயர் அதிகாரிகளும் பிரதமர் அலுவலக அதிகாரிகளை சந்தித்து விளக்கி உள்ளனர்.  இந்த திட்டத்தை அரசு பரிசீலனை செய்து வருகிறது.

இது குறித்து அமைச்சரவை மட்டுமே முடிவெடுக்க முடியும்.   தற்போது தேர்தல் நடைமுறை விதிகள் அமுலில் உள்ளதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதி இன்றி அமைச்சரவை கூட்டம் நடதத முடியாது.  எனவே தொலைதொடர்புத் துறை அமைச்சரவை கூட்டம் நடத்த அனுமதி அளிக்க தேர்தல் ஆணையத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அமைச்சரவை ஒப்புதல் அளித்தால் இந்த திட்டத்தின் கீழ் விருப்ப ஓய்வு பெறுவோருக்கான இழப்பீடு பத்து வருட பத்திரஙகளாக அளிக்கப்பட உள்ளது.    இந்த பணத்தை பத்து வருடம் கழித்து அவர்கள் வட்டியுடன் பெற முடியும்.

தற்போது ரிலையன்ஸ் ஜியோ பிரபலமடைந்து வருவதால் பிஎஸ்என்எல் மற்றும் எம் டி என் எல் நிறுவனங்கள் கடும் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன.   ஊழியர்களின் ஊதியத்துக்கு அதிகம் செலவாகி வருவதால் இந்த திட்டம் அறிவிக்கப்பட உள்ளது.