வீட்டிலிருந்தே பணிபுரிவோருக்கு இலவச பிராட்பேண்ட் சேவை – பிஎஸ்என்எல் சலுகை!

புதுடெல்லி: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, வீட்டிலிருந்தே பணிபுரியும் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த தனது வாடிக்கையாளர்களுக்கு, 1 மாத காலம் வரையில் இலவச பிராட்பேண்ட் சேவை வழங்கப்படும் என்ற அறிவிப்பு பிஎஸ்என்எல் சார்பாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவை முழுமூச்சுடன் கொரோனா வைரஸ் தாக்கும் சூழல் தற்போது நிலவுவதால், பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதில் ஒன்றுதான், நேரடியாக அலுவலகம் செல்வோர் வீட்டிலிருந்தே பணியாற்றலாம் என்று அறிமுகம் செய்யப்பட்ட நடவடிக்கை. இதன்படி, ஐடி நிறுவனங்கள் உட்பட, பல்வேறு நிறுவனங்களின் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், இவ்வாறு வீட்டிலிருந்தே பணியாற்றும் ஊழியர்களை உற்சாகப்படுத்தி மகிழ்விக்கும் வகையில், தனது வாடிக்கையாளர்களுக்கு ஒருமாத காலத்திற்கு இலவச பிராட்பேண்ட் சேவை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம்.