பறக்கும் விமானத்தினுள் இணைய சேவை வழங்க உரிமம் பெற்ற பி எஸ் என் எல்

டில்லி

ந்தியாவுக்குள் பறக்கும் விமானத்தினுள் இணைய சேவை அளிக்கும் உரிமத்தை பி எஸ் என் எல் பெற்றுள்ளது.

சர்வதேச விமான சேவையில் பல நாடுகளில் விமானம் பறக்கும் போது விமானத்தினுள் இணைய சேவைகள் அளித்து வருகின்றன. ஆனால் இந்தியா மீது பறக்கும் போதும் இந்திய விமானத்தினுள் பறக்கும் போதும் இந்த சேவைகள் வழங்கப்படுவதில்லை. அதனால் வெளிநாட்டு விமான சேவை நிறுவனங்களான லூஃப்தன்சா, கத்தார் ஏர்வேஸ் மற்றும் இந்திய விமான சேவை நிறுவனமான ஸ்பஸ்ஜெட் உள்ளிட்டவை விமானங்கள் இந்தியாவில் பறக்கும் போது இணைய சேவை வழங்க விருப்பம் தெரிவித்தன.

இன்மர்சாட் எனப்படும் சர்வதேச இணைய சேவை நிறுவனம் வான்வெளி இணையதள சேவையை செய்து வருகிறது. அந்த நிறுவவனம் இந்திய அரசு தொலை தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு விமானத்தினுள் இணைய சேவை வழங்கும் உரிமத்தை அளித்துள்ளது. இனி இந்தியாவிலும் பறக்கும் விமானத்தினுள் இணைய சேவை பெற முடியும்.

இது குறித்து இன்மர்சாட், “இந்த உரிமத்தின் மூலம் இந்திய வான்வெளி இணைய தள சேவைக்குள் இன்மர்சாட் அடியெடுத்து வைத்துள்ளது. பி எஸ் என் எல் க்கு அளிக்கப்பட்ட உரிமத்தின் மூலம் அந்த நிறுவனம் இன்மர்சாட்டின் க பாண்ட் மற்றும் எல் பாண்ட் ஆகிய சேவைகளை அளிக்க முடியும். இதற்காக நிலத்தில் செய்யப்படவேண்டிய உள் கட்டமைப்பு பணிகள் தொடங்கப் பட்டுள்ளன. அவை விரைவில் முடிவடைந்து இந்த வருட இறுதிக்குள் இந்த சேவை தொடங்கப்படும்” என அறிவித்துள்ளது.