மாறன் பிரதர்ஸ் மீதான பிஎஸ்என்எல் இணைப்பு முறைகேடு: சிபிஐ மேல்முறையீடு வழக்கு இன்று விசாரணை

சென்னை:

ட்டவிரோத பிஎஸ்என்எல் இணைப்பு முறைகேடு வழக்கில் இருந்து மாறன் சகோதரர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து  சிபிஐ தரப்பில் மேல்முறையீடு  செய்யப்பட்ட வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பில் வழக்கறிஞர்கள் வழக்கு விசாணை இன்று நடைபெற்றும் என்று அறிவிக்கப்பட்டது. அதையடுத்து இன்று விசாரணை நடைபெறுகிறது.

காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு  ஆட்சியின்போது, திமுகவை சேர்ந்த தயாநிதி மாறன்  மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி,  பி.எஸ்.என்.எல் இணைப்பை தனது அண்ணனின் சன்டிவி நிறுவனத்துக்கு முறைகேடாக  பயன்படுத்தியதாகவும், இதனால் அரசுக்கு 1.78 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும் சி.பி.ஐ வழக்குத் தொடர்ந்தது.

இந்த வழக்கில் அனைவரையும் விடுதலை செய்து  சிபிஐ நீதிமன்ற நீதிபதி கடந்த மார்ச் மாதம் 14ந்தேதி உத்தரவிட்டார். இதை  எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுமீதான விசாரணை கடந்த 12ந்தேதி  நடைபெற்றது. வழக்கை  விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், இந்த வழக்கில், குற்றம் சாட்டப் பட்டுள்ள  கலாநிதிமாறன், தயாநிதிமாறன் உள்ளிட்ட 7 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதுடன், அவர்கள் வரும் 20ம் தேதிக்குள் பதிலளிக்கவும் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்திருந்தார்.

அதன்படி நேற்று மீண்டும் விசாரணை நடைபெற்றது.  அப்போது வழக்கில் ஆஜராக மாறன் சகோதரர்களின் வழக்கறிஞர்கள்  மட்டுமே வந்திருந்தனர். மற்ற 5 பேரின் சார்பில் வழக்கறிஞர்கள்  யாரும் ஆஜராகவில்லை.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை வியாழக்கிழமைக்கு (இன்று) ஒத்திவைத்து உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.