டில்லி:

டந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வரும் அரசு பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல், கடந்த 3 மாதங்களாக  ஊழியர்களுக்கு சம்பளத்தை கொடுக்க முடியாத நிலையில் உள்ளது.

இந்த நிலையில், 54ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப பிஎஸ்என்எல் நிர்வாக்ம்  முடிவு செய்துள்ளது. இதற்காக அரசின் உத்தரவை எதிர்பார்த்து காத்திருக்கிறது. இது தொழிலாளர்களி டையே பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

அரசின் தொலைத்தொடர்புதுறை நிறுவனமான பிஎஸ்என்எல், தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களின்  போட்டியை சமாளிக்க முடியாமல், கடந்த 5 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வருகிறது. . இதன் காரணமாக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது..

ஏற்கனவே சம்பள பிரச்சினை காரணமாக, பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கங்கள் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹாவை அணுகி கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆனால், மத்திய அரசு பிஎஸ்என்எல் ஊதியத்தை வழங்க எந்தவொரு முயற்சியையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே வரும் வருவாயை வைத்து சம்பள பிரச்னையைச் சரிசெய்து வருவதாக பி.எஸ்.என்.எல் அதிகாரிகள் கூறுகின்றனர்.

பி.எஸ்.என்.எல் நிறுவனம் 2017 நிதி ஆண்டில் 4,786 கோடி ரூபாயும், 2018 நிதி ஆண்டில் 8,000 கோடி ரூபாயும் நட்டம் அடைந்துள்ளது. 2019 நிதி ஆண்டில் மேலும் கூடுதலான நட்டத்தையே பிஎஸ்என்எல் பதிவு செய்யும் என்றும் கூறுகின்றனர்.

தற்போது, பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் 1.76 லட்சம் ஊழியர்கள் பணி செய்து வருவதாக கூறப்படுகிறது. நிதிப்பற்றாக்குறையில் தவித்து வரும் நிலையில், 54ஆயிரம் ஊழியர்களுக்கு ஓய்வு கொடுக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

பிஎஸ்என்எல் நிர்வாக இயக்குனர்கள் குழுவில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாகவும், ஓய்வு பெறும் வயது வரம்பை  60ல் இருந்து 58 ஆக குறைக்கவும், 50வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களுக்கு விஆர்எஸ் எனப்படும் விருப்ப ஓய்வு கொடுக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.‘

தற்போது நாடு முழுவதும் உள்ள மொத்த பிஎஸ்என்எல் ஊழியர்கள், 1,74,312 பேர். இவர்களில் 54,151 பேர் அதாவத 31% சதவிகித ஊழியர்களை குறைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான அரசின் அனுமதியை எதிர்பார்த்து இருப்பதாகவும், தேர்தல்  முடிந்த பின்னர், இது குறித்து அறிவிக்கப்படும் என்றும் பிஎஸ்என்எல் நிர்வாகிகள் கூறி உள்ளனர்.

இது பிஎஸ்என்எல் ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.