சென்னை,

பி.எஸ்.என்.எல். தொலைப்பேசி இணைப்பக முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்கள் உள்பட 7 பேருக்கு குற்றப்பத்திரிகை ஏற்கனவே  நகல் வழங்கப்பட்டது.

இந்த வழக்கில்  தயாநிதி மாறன், கலாநிதி மாறன் ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டு பதிவு இன்று நடைபெறுகிறது.

இதற்காக இவர்கள் இருவர் உள்பட இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளனர்.

பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கில், சிபிஐ கோர்ட்டில் இதுகுறித்த வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9ந்தேதி  சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

இந்த குற்றப்பத்திரிகையின் நகலை ஜூன் 6ந்தேதி நடைபெற்ற  விசாரணையின்போது மாறன் சகோதரர்கள் உள்பட குற்றம் சாட்டப்பட்டவர்கள் 7 பேரும் சிபிஐ கோர்ட்டில் ஆஜரானார்கள். அவர்களிடம் சுமார் 2500 பக்கம் உள்ள குற்றப்பத்திரிகையின் நகல் வழங்கப்பட்டது.

இதையடுத்து விசாரணை 28ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இன்றைய விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள்மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என தெரிகிறது.

பிஎஸ்என்ல் முறைகேடு  வழக்கு குறித்து ஒரு பார்வை…

தயாதி மாறன் மத்திய தொலைதொடர்பு துறைஅமைச்சராக இருந்தபோது,  பி.எஸ்.என்.எல். அதிவேக இணைப்புகளை முறைகேடாக  சன் தொலைக்காட்சிக்கு சட்ட விரோதமாக வழங்கிய தாகவும், அதன் காரணமாக, அரசுக்கு ஒரு கோடியே 78 லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக, ஆடிட்டர் குரூமூர்த்தி என்பவர்  சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதல்படி வழக்கு சென்னை சிபிஐ கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் தொடர்புடைய  முன்னாள் அமைச்சர்   தயாநிதி மாறன், அவரது சகோதரரும் சன் குரூப் அதிபருமான கலாநிதி மாறன், சென்னை பி.எஸ்.என்.எல்லின் பொது மேலாளராக இருந்த கே.பிரம்மநாதன், அந்த நிறுவனத்தின் முன்னாள் துணைப் பொது மேலாளர் எம்.பி. வேலுசாமி, தயாநிதி மாறனின் தனிச் செயலாளராக இருந்த கவுதமன், சன் தொலைக்காட்சியின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி கண்ணன், எலக்ட்ரீஷியன் ரவி ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கில் கடந்த ஆண்டே சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. ஆனால், விசாரணைக்கு மாறன் சகோதரர்கள் ஆஜராகாமல் இழுத்தடித்தால், விசாரணை தாமதமாகி வருகிறது.

இந்த வழக்கின் விசாரணை சென்னை 14-வது சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

கடந்த ஏப்ரல் 3ந்தேதி நடைபெற்ற விசாரணையின்போது மாறன் சகோதரர்கள் உள்பட அனை வரும் ஆஜராகினர்.  விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் தரப்படும் என்றும், அதன் காரணமாக அனைவரும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி கூறியிருந்தார்.

ஆனால், கடந்த மே 22ந்தேதி நடைபெற்ற விசாரணையின்போது,  சி.பி.ஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை நகலை பெறுவதற்காக மாறன் சகோதரர்கள் யாரும் கோர்ட்டில் ஆஜராக வில்லை. தயாநிதிமாறனின் சிறப்பு தனிச்செயலாளர் கவுதமன் உள்பட ஒருசிலர் மட்டுமே இன்று நீதிமன்றம் வந்தனர்.

இதனால் கோபமடைந்த நீதிபதி, விசரணைக்கு ஆஜராகாத மாறன் சகோதரர்களுக்கு கண்டனம் தெரிவித்தார்.  அடுத்த விசாரணையின்போது, குற்றம் சாட்டப்பட்ட மாறன் சகோதரர்கள் உள்பட அனைவரும் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று கூறி விசாரணையை தள்ளி வைத்தார்.

அதைத்தொடர்ந்து கடந்த ஜூன் ஜூன் 6ந்தேதி நடைபெற்ற  விசாரணையின்போது மாறன் சகோதரர்கள் உள்பட குற்றம் சாட்டப்பட்டவர்கள் 7 பேரும் சிபிஐ கோர்ட்டில் ஆஜரானார்கள். அவர்களிடம் சுமார் 2500 பக்கம் உள்ள குற்றப்பத்திரிகையின் நகல் வழங்கப்பட்டது. அதன் தொடர் விசாரணை இன்று நடைபெறுகிறது…