லக்னோ:

உ.பி. முன்னாள் முதல் மந்திரியான மாயாவதியை  மூன்றாம் பாலினத்தவர் என விமர்சித்த பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ. சாதனா சிங் தலைக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு அளிப்பதாக பகுஜன் சமாஜ் முன்னாள் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

யோகி ஆட்சி செய்து வரும் உ.பி. மாநிலத்தில் பாஜக எம்எல்ஏ  சாதனா சிங், நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, பகுஜன் சமாஜ் கட்சி தலைவி  மாயாவதி குறித்து மிகவும் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்தார்.   சுயமரியாதை பற்றி மாயாவதிக்கு ஒன்றும் தெரியாது.

மகாபாரதத்தில் திரவுபதி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டபின், அவர் பழிவாங்கும் எண்ணத்துக்குத் திரும்பி னார். ஆனால், மாயாவதி, அனைத்தையும் இழந்துவிட்டார்.   மாயாவதியை பார்த்தால் ஆண் போலவும் தெரியாது, பெண் போலவும் தெரியாது. மூன்றாம் பாலினத்தவர் போல் இருப்பார் எனவும் தெரிவித்திருத்திருந்தார்.

இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சாதனாசிங்கின் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும்  எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து தனது பேச்சு வருத்தம் தெரிவிப்பதாக சாதனா சிங்  தெரிவித்தார்.

இந்த நிலையில், சாதனாசிங் பேசியது தொடர்பாக மாயவதியிடமும் நாட்டு மக்களிடமும் சாதனா சிங் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. விஜய் யாதவ் வலியுறுத்தி உள்ளார்.  அப்படி மன்னிப்பு கேட்க தவறினால் சாதனா சிங்கின் தலையை வெட்டி கொண்டுவந்து என்னிடம் ஒப்படைப்பவர்களுக்கு எங்கள் கட்சி தொண்டர்களிடம் இருந்து வசூலித்து 50 லட்சம் ரூபாய் சன்மானமாக தருவேன் எனவும் கூறி உள்ளார்.

இது உ.பி. மாநிலத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.