தேர்தலில் சீட் தருவதற்கு மாயாவதி 2 கோடி ரூபாய்  கேட்டதால்  தொண்டர் தற்கொலை….

தேர்தலில் சீட் தருவதற்கு மாயாவதி 2 கோடி ரூபாய்  கேட்டதால்  தொண்டர் தற்கொலை….

உத்தரப்பிரதேச மாநிலம் காசிப்பூரை சேர்ந்தவர் முன்னு பிரசாத். பகுஜன் சமாஜ் கட்சியின் தொண்டர். சிறு அளவில் வியாபாரம் செய்து வந்தார்.

அவர் திடீரென தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலைக்கு மாயாவதியே காரணம் என குற்றம் சாட்டி அவர் கடிதம் எழுதி வைத்துள்ளார்.

‘’தேர்தலில் போட்டியிடக் கட்சி மேலிடத்தில் டிக்கெட் கேட்டேன். ஆனால் சீட் தருவதற்கு  எங்கள் கட்சியின் தலைவர் மாயாவதி இரண்டு கோடி ரூபாய் கேட்டார். அவ்வளவு பணம் கொடுக்க எனக்கு வசதி இல்லாததால் தற்கொலை முடிவை மேற்கொள்கிறேன்’’ என முன்னு பிரசாத் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 ’’தற்கொலை செய்து கொண்டவர்  எங்கள்  கட்சியின் உறுப்பினர் இல்லை’’ என காசிப்பூர் மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் குட்டுராம் மறுத்துள்ளார்.

ஆனால் பிரசாத்தின் பக்கத்து வீட்டுக்காரர்கள், அவர் பகுஜன் சமாஜ் கட்சிக்காரர் தான். அந்த கட்சியின் நிகழ்ச்சிக்குச் செல்வது உண்டு’’ எனத் தெரிவித்தனர்.

 -பா.பாரதி.