கர்நாடகா இடைத்தேர்தலில் எடியூரப்பா மகன் வெற்றி!

கர்நாடகா மாநிலம், ஷிவ்மோகா பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் ராகவேந்திரா 52,148 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ragavendra

கர்நாடக மாநிலத்தின் ஷிவமோகா தொகுதியின் பா.ஜ.க. எம்.பி.யும், அம்மாநில முன்னாள் முதல்மைச்சருமான எடியூரப்பா சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, காலியாக இருந்த ஷிவமோகா, மன்டியா, பல்லாரி ஆகிய பாராளுமன்ற தொகுதிகளுக்கு கடந்த மூன்றாம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அம்மாநிலத்தை ஆளும் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிட்டன.

இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின. அதன்படி ஷிவமோகா தொகுதி பா.ஜ.க. வேட்பாளரும் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மகனுமான ராகவேந்திரா 52,148 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பிற வேட்பாளர்களை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட பங்காரப்பாவின் மகன் மது பங்காரப்பா தோல்வியை தழுவினார்.

Leave a Reply

Your email address will not be published.