த போதனை என்ற பெயரில் அரபு நாட்டிற்கு பெண்களை விற்பனை செய்த புத்த பிக்கு  இலங்கையில் கைது செய்யப்படார்.

இலங்கையில் உள்ள கட்டுநாயக்க விமான நிலையத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் நடந்துக்கொண்ட 10 பெண்களை அதிகாரிகள் விசாரித்தனர். வேலைக்காக துபாய் செல்வதாக தெரிவித்தனர். அவர்கள் கூறிய பல தகவல்கள் முன்னுக்குப்பின் முரணாக இருந்ததை அடுத்து அவர்களை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகள் விசாரித்தனர்.

அப்போது அந்த பெண்கள், , தங்களை புத்த பிக்கு ஒருவர் அனுப்பி வைப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து அந்த புத்த பிக்குவும் விசாரிக்கப்பட்டார்.

அவர், “துபாய் நாட்டில் நடக்கும் தர்ம போதனைக்காக 10 பெண்களை அழைத்துச் சென்று அங்கிருந்து நேபாளத்திற்கு யாத்திரை அழைத்துச் செல்ல இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.

அதிகாரிகளின் தொடர் விசாரணையில், புத்தபிக்கு கூறியது பொய் என்பதும், அவர் பல காலமாக பல பெண்களை வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாக அனுப்பி வந்ததும் தெரியவந்தது. அதாவது, இடைத்தரகர்கள் மூலம் பெண்களை அரபு நாட்டில் விற்று வந்திருக்கிறார்கள்.

இதையடுத்து அவரும், அவருக்கு உதவியாக இருந்த இரு நபர்களும் கைது செய்யப்பட்டனர். வட்டுகொட பகுதியில் மீகொடமுல்ல ஜயசிறி விகாரையில் வசித்து வரும் பள்ளதெனிய ரதனசிறி தேரர், பொரள்ளை சஹசுபுர பிரதேசத்தை சேர்ந்த ஹெட்டியாராச்சி சுரஞ்சித், வெல்லம்பிட்டி, மீதொடமுல்ல பிரதேசத்தை சேர்ந்த சசித சங்கல்ப ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர். .

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள இலங்கை அமைச்சர் தலதா அத்துகோரள, “மோசடி நபர்களிடம் ஏமாற வேண்டாம் எனவும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாமல் வெளிநாடுகளுக்கு தொழில்களுக்காக செல்வதன் மூலம் பல பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும்” என்று எச்சரித்துள்ளார்.