ராச்சி

டத்தல் காரர்களிடம் இருந்து மீட்கப்பட்ட ஐந்து புத்தர் சிலைகள் பாகிஸ்தான் அருங்காட்சியகத்தில் குப்பைகளாக போடப்பட்டுள்ளன.

ஆஃப்கானிஸ்தானின் கந்தகார் பகுதியில் ஒருவகை கல்லால் செதுக்கப்பட்ட புத்தர் சிலைகள் காணாமல் போயின.   அந்தக் கற்களால் செதுக்கப்பட்ட சிலைகள் மழை, வெய்யில் மற்றும் எந்த ஒரு ரசாயனத்தாலும் பாதிப்படையாத தன்மை கொண்டவை.  இந்த சிலைகள் பின்பு 2012ஆம் வருடம் பாகிஸ்தான் காவல் துறையினாரால் மீட்கப் பட்டன.    இவைகள் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய இருந்த நிலையில் விற்கும் முன்பு கைப்பற்றப் பட்டன.

இந்த சிலைகளை கராச்சியில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கச் சொல்லி நீதிமன்றம் ஆணையிட்டதன் பேரில் அங்கு ஒப்படைக்கப்பட்டன.   அவைகளை சரியாக பராமரிக்காமல் ஓரு திறந்த வெளியில் அருங்காட்சியக நிர்வாகத்தினரால் போடப் பட்டுளன.  பிறகு அதே இடத்தில் குப்பை கூளங்கள் கொட்டப்பட்டு தற்போது ஒரு குப்பை மேட்டில் அந்த சிலைகள் உள்ளன.  இது பாகிஸ்தானின் ஊடகங்களில் செய்தியாக வெளி வந்தது.

இது குறித்து அந்த அருங்காட்சியகத்தின் இயக்குனர் முகமது ஷா, “இந்த சிலைகள் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என்பது சரியே.   ஆனால் எத்தனை நாட்கள் ஆனாலும் இந்த சிலைகள் நீரால் கழுவினாலே புதிது போல ஆகிவிடும்.   அது மட்டும் இன்றி குப்பைகளோ, மழையோ, வெயிலோ எதனாலும் பாதிக்கப்படாத தன்மை கொண்ட சிலைகள் இவை.    அதனால் வெட்ட வெளியில் வைக்கப்பட்டுள்ளன.   குப்பை அங்கு போடப்பட்டது தற்செயலான ஒன்று.   மேலும் ஐந்து சிலைகளில் இரண்டு சிலைகளை அருங்காட்சி அகத்தின் வாயிலில் அழகுக்கு வைக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

அருங்காட்சியகத்தை சேர்ந்த மற்றொரு பணியாளர் வருடக்கணக்கில் இந்த சிலைகள் குப்பையில் போடப்பட்டுள்ளதாகவும்,   மேலும் வாயிலில் எந்த சிலைகளும் வைக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.