டில்லி:

மத்திய நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்து வருகிறார். அதில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

பட்ஜெட்-2019-20: மக்கள் நகரங்களுக்கு இடம்பெயருவதை தடுக்க கிராமங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு ள்ளது.

விவசாய ஆன்லைன் சந்தைகள் மூலம் மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுவோம் –

வேளாண்துறை உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்

தானிய உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்றுள்ளது. எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியிலும் தன்னிறைவு பெறுவோம் என நம்பிக்கை உள்ளது.

உணவுத்துறையில் தன்னிறைவு அடைந்த நாடாக இந்தியா மாறியதற்கு காரணம் இந்திய விவசாயிகள்.

விவசாயிகளுக்கு நன்மைகள் கொண்டு சேர்க்க மாநில அரசுகளோடு மத்திய அரசு சேர்ந்து செயல்படும்

மக்கள் நகரங்களுக்கு இடம்பெயர்வதை தவிர்க்க கிராமங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்.

ஒவ்வொரு கிராமத்திலும் இணைய வசதி கிடைப்பதை உறுதி செய்வோம்

இலவச சமையல் எரிவாயு திட்டம் சவுயாக்யா திட்டங்கள் ஊரகப்பகுதி வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியுள்ளனர்

இலவச சமையல் எரிவாயு திட்டம், சவுபாக்யா திட்டங்கள் மக்களின் வாழ்கைத் தரத்தை மேம்படுத்தியுள்ளன.

அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 9.9 கோடி வீடுகள் கட்டப்படும்

13,000 கிராம சாலைகள் பசுமை திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளன.

2024-க்குள் ஒவ்வொரு வீட்டுக்கும் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்வோம். தண்ணீர் பற்றாக்குறையை போக்குவது மிகவும் முக்கியமான குறிக்கோள்.

6 லட்சம் கிராமங்களில் திறந்தவெளி கழிப்பறைகள் ஒழிக்கப்பட்டுள்ளன.