பாராளுமன்றத்தில் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் பணிபுரியும் பெண்களுக்கு 26வாரம் மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் எனவும், 6 கோடி பேருக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

budget

பாஜக அரசின் ஆட்சி முடிவுக்கு வரவுள்ள நிலையில் தற்போது இந்த ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் அருண்ஜெட்லி உடல்நலக்குறைவு காரனமாக சிகிச்சை பெற்று வருவதால் அவருக்கு பதிலாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நிதி பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.

அதில், “ பணிபுரிவும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு 26 வாரங்கள் அளிக்கப்படும். மாதம் ரூ.15 ஆயிரத்திற்கு கீழ் ஊதியம் பெறுவோருக்கு புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும். மேலும் மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் மூலம் சுமார் 6 கோடி பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும். முத்ரா திட்டத்தின் மூலம் ரூ.7.23லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் 70 சதவிகிதத்தினர் பெண்கள்” என கூறப்பட்டுள்ளது.

bud

அதுமட்டுமின்றி, ரானுவத்திற்காக மத்திய பட்ஜெட்டில் இருந்து ரூ.3 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒருபதவி ஒரு ஓய்வூதிய திட்டத்திற்கு ரூ.35 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 34 கோடி ஜன்தன் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன என மத்திய பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்ரி, தற்போது ரயில் விபத்துக்கள் குறைந்துள்ளதாகவும், உலகளவில் வேகமாக நெடுஞ்சாலைகள் அமைக்கும் நாடுகளின் பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ள இந்தியா சராசரியாக தினமும் 27 கி.மீ. தூரத்திற்கு சாலைகளை அமைத்து வருகிறது. சூரிய மின்சக்தி உற்பத்தியில் சுமார் 10 மடங்கு அதிகரித்துள்ளது எனவும் மத்திய அரசின் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.