பட்ஜெட் தொடர்ச்சி….

2024ஆம் ஆண்டுக்குள் 100 விமான நிலையங்கள் மேம்படுத்தப்படும்.

தேஜஸ் போன்ற ரயில்கள் மேலும் அறிமுகப்படுத்தப்படும். ரயில்வேக்கு சொந்தமான இடங்களில் ரயில்பாதைக்கு அருகே மிகப்பெரிய அளவில் சூரிய மின்சக்தித் திறன் நிறுவப்படும் எனவும் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

புதிதாக உருவாக்கபப்ட்ட ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு ரூ.30,757 கோடி  ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

லடாக் மேம்பாட்டிற்காக 5958 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.