நிதி நிலை அறிக்கை 2020 : ரூ.7 லட்சம் வரை உள்ள வருமானத்துக்கு 5% வரி விதிப்பா?

டில்லி

டுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள நிதிநிலை அறிக்கையில் 5% வருமான வரி வரம்பு ரூ.7 லட்சமாக உயர்த்தப்படலாம் எனக் கூறப்படுகிறது

இந்தியப் பொருளாதார மந்தநிலை காரணமாக தற்போது மக்களிடையே பணப்புழக்கம் மிகவும் குறைந்து காணப்படுகிறது.   அதைச் சரி செய்ய மத்திய அரசு  பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.   இந்த நடவடிக்கைகள் அடுத்த மாதம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ள நிதிநிலை அறிக்கையிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்ப்பு உள்ளது.

சமீபத்தில் வெளி வந்த அதிகாரப்பூர்வமற்ற தகவலின்படி வருமான வரி விகிதம் குறைக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.   தற்போது ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு 5% வரி விதிக்கப்படுகிறது.   அது மாற்றப்பட்டு ரூ. 2.5 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 5% வரி விதிக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

அத்துடன் ரூ.7 முதல் 10 லட்சம் வருவாய்க்கு 10%,  ரூ.10 முதல் ரூ.20 லட்சம் வருமானத்ஹ்டுக்கு 20% வரி விதிக்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  அத்துடன் ரூ.20 லட்சம் முதல் ரூ.10 கோடி வரை வருமானத்துக்கு 30% வரியும் ரூ.10 கோடிக்கு மேற்பட்ட வருமானத்துக்கு 35% வரியும் விதிக்கப்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த தகவல் உண்மையாக இருந்தால் மாத ஊதியம் பெறுவோருக்கு நனமை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது  உதாரணமாக ரூ.10 லட்சம், 15 லட்சம் மற்றும் ரூ.20 லட்சம் வருமானம் பெறுவோர் செலுத்தும் வரியில் முறையே ரூ.60000,  ரூ.1.1 லட்சம் மற்றும் ரூ.1.5 லட்சம் வரை மீதமாகும்..

இதனால் மக்களிடையே பணப்புழக்கம் அதிகரித்து சில்லறை வர்த்தகம் முன்னேற்றம் காணும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.   அதே வேளையில் இந்த வருமான வ்ரிக்குறைப்பால் பொது மக்களில் குறைந்த எண்ணிக்கையில் உள்ளவர்களே பயன்பெறுவார்கள் எனவும் இதனால் பொருளாதாரத்தில் பெரிய அளவு மாற்றம் ஏற்படாது எனவும் ஒரு சிலர் கூறுகின்றனர்.

கார்ட்டூன் கேலரி