பட்ஜெட்2020: ஆதிச்சநல்லூரில் தொல்லியல்துறை சார்பில் அருங்காட்சியம்…

பட்ஜெட் தொடர்ச்சி,,, 

பட்ஜெட்டில், நாட்டில் 5 இடங்களில் தொல்லியல் துறை அகழ்வராய்ச்சி அருங்காட்சியம் அமைக்கப்படுவதாக தெரிவித்த நிதி அமைச்சர், தமிழகத்தில் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைப்பதாக அறிவித்தார். ஆனால் கீழடி குறித்து ஏதும் தெரிவிக்காததால், தமிழக எம்.பி.க்கள் கூச்சலிட்டனர்.

இந்தியாவில்  தொல்லியல்துறை சார்பில்  அரியானாவில் ராக்கிகர்ஹி, உ.பியில் ஹஸ்தினாபூர், அஸ்ஸாமில் சிவ்சாகர், குஜராத்தில் தோலாவிரா, தமிழகத்தில் ஆதிச்சநல்லூர் ஆகிய 5 இடங்களில் தொல்பொருள் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என கூறினார்.

அதைத்தொடர்ந்து,   மத்திய அரசு கீழடியை  புறக்கணிப்பதாக தமிழக எம்பிக்கள் கோஷமிட்டனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது.

உலகின் பழமையான நகரங்களில் ஆதிச்சநல்லூரும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை இங்கு செய்யப்பட்ட ஆய்வுகள் எல்லாம் வரலாற்று ஆராய்ச்சியாளர்களை பிரம்மிப்பிற்கு உள்ளாக்கி இருக்கிறது. ஆதிச்சநல்லூரில் கிடைத்த இரு பொருள்களில் ஒன்று கி.மு.905, மற்றொன்று கி.மு.971 ஆம் ஆண்டைச் சேர்ந்தவை என மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. கார்பன் சோதனை மூலம் இதன் வயது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது இங்குதான் மியூசியம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.