பட்ஜெட் தொடர்ச்சி….

சுகாதாரத்துறை திட்டங்களுக்காக ரூ.69,000 கோடி ஒதுக்கீடு. தூய்மை இந்தியா திட்டத்திற்கு ரூ.12 ஆயிரத்து 300 கோடி ஒதுக்கீடு.

ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் தனியார் பங்களிப்புடன் மருத்துவமனைகள் கட்ட திட்டம். சிறு நகரங்களுக்கும் மருத்துவ வசதி கொண்டு செல்வதற்கான விரிவான திட்டங்கள்

2025 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் காச நோயை முற்றிலுமாக ஒழிக்கத் திட்டம்

மாவட்ட மருத்துவமனை அளவில் மருத்துவ கல்லூரிகள் விரிவுபடுத்தப்படும்

இந்தியாவில் படிப்போம் என்ற திட்டம் முன்னெடுக்கப்படும் . ஆன்லைன் மூலம் பட்டப்படிப்புக்கு இணையான சான்றிதழ் படிப்பு வழங்க ஆலோசனை

ஜல்ஜீவன் திட்டத்திற்கு ரூ.3.6 லட்சம் கோடி ஒதுக்கீடு. தண்ணீர் பற்றாக்குறை உள்ள 100 மாவட்டங்களுக்கு விரிவான திட்டங்கள் செயல்படுத்தப்படும்

தேசிய போலீஸ் பல்கலைக்கழகம் நிறுவப்படும்

ஊரக வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.1.23 லட்சம் கோடி இலக்கு

தெற்காசிய தடயவியல் மற்றும் சைபர் அறிவியல் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்

பல்வேறு முக்கியமான நகரங்கள் தேஜஸ் ரயில் மூலம் இணைக்கப்படும்- நிர்மலா சீதாராமன்

நாடு முழுவதும் புதிதாக 5 நகரங்கள் சீர்மிகு நகரங்களாக மேம்படுத்தப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.