பட்ஜெட் தொடர்ச்சி…

நிதி அமைச்சர் தாக்கல் செய்து வரும் பட்ஜெட்டில், வருமான வரி செலுத்துவோருக்கு  5சதவிகிதம் வகையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. .

ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

ரூ.5 லட்சம் முதல் ரூ.7.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுவோருக்கு இதுவரை இருந்த 20%வருமான வரி 10 % ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோல ரூ.7.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுவோர் இதுவரை செலுத்தி வந்த வருமான வரி 20%ல் இருந்து 15% ஆகக் குறைக்கப்படுகிறது.

மேலும், ரூ.10 லட்சம் முதல் ரூ.12.5 லட்சம்  வரை ஆண்டு வருமானம் பெறுவோர் இதுவரை செலுத்தி வந்த வருமான வரி 30%ல் இருந்து 20% ஆகக் குறைக்கப்படுகிறது.

ரூ.12.5 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சம் வரை ஆண்டு வருமானம் ஈட்டுவோரின் வருமான வரி 30% இருந்து 25% ஆகக் குறைக்கப்படுகிறது.

ரூ.15 லட்சத்துக்கும் மேல்  ஆண்டு வருமானம் ஈட்டுவோரின் வருமான வரி 30% ஆகவே நீடிக்கும்.

ரூ. 5 லட்சம் வரை வருமான வரி இல்லை
ரூ.5 – 7.5 லட்சம் வரை : 10%
ரூ.7.5 – 10 லட்சம் வரை : 15%
ரூ.10 – 12.5 லட்சம் வரை: 20%
ரூ.12.5 – 15 லட்சம் வரை: 25%
ரூ.15 லட்சத்துக்கு மேல்: 30% ஆகவே நீடிப்பு

வருமான வரி குறைப்பால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதே வேளையில் இந்த புதிய வருமான வரி அறிவிப்பில் சில உள்குத்துக்களையும் நிதி அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

இன்று அறிவித்துள்ள இந்த புதிய தனிநபர் வருமான வரிச் சலுகைகள் என்பது ஆப்ஷனல். அதாவது நாம் தேர்ந்தெடுத்துக் கொள்வது தான்.

ஏற்கனவே பல்வேறு முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு, இந்த வரிச்சைலுகை கிடைக்காது. பொதுவாக வருமான வரி செலுத்துபவர்கள், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, எல்ஐசி காப்பீடு, உள்ளிட்ட பல்வேறு முதலீடுகள் செய்திருப்பார்கள். அதை ஆதாரமாக காண்பித்து வரி சலுகைகளையும் பெற முடியும்.

ஆனால் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த நடைமுறைப்படி அந்த வரி சலுகைகளை பெற முடியாது. இதனால் பலன் கிடைக்கப் போவது ஒரு சிலருக்கு மட்டுமே.

இந்த வருமான வரிச்சலுகை என்பது ஒரு கண்துடைப்பே….மக்களை ஏமாற்றும் மாயக்கண்ணாடி.

இன்றைய அறிவிப்பு நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.