பட்ஜெட் கூட்டத்தொடர்: டில்லியில் அனைத்துக்கட்சி கூட்டம்!

--

டில்லி,

நாளை மறுதினம் (பிப்ரவரி 1ந்தேதி) முதல் பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க இருப்பதால் இன்று அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன்,   நாளை மறுநாள் தொடக்க இருக்கும் பட்ஜெட் கூட்டம் சுமுகமாக நடைபெறும் வகையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார்.

இந்த கூட்டத்தில் அனைத்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பிரதமர் மோடியும் கலந்து கொள்கிறார்.

மேற்குவங்கத்தில் சரஸ்வதி பூஜை இருப்பதால், திரிணாமுல் காங்கிரஸ்  இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக  மம்தா கூறியுள்ளார்.

பிப்ரவரி 1ந்தேதி மத்தியஅரசு பட்ஜெட் தாக்கல் முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு பொது பட்ஜெட்டுடன் ரெயில்வே பட்ஜெட்டும் இணைந்து தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அதன் காரணமாக இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்தது.

ஏற்கனவே நவம்பர் மாதம் 16-ம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 16-ம் தேதி வரை  நடை பெற்ற பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் எதிர்க்கட்சியின் அமளியால் ஒரு மாதமும் முடங்கிபோனது குறிப்பிடத்தக்கது.