சென்னை:

த்திய பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் மீது கூடுதலாக ஒரு சதவிகிதம் வரி விதிக்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை கிடுகிடு உயர்ந்துள்ளது. லிட்டருக்கு ரூ.2.50 முதல் ரூ.3 வரை உயர்ந்துள்ளது.

2019-20 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நேற்று மக்களவையில் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து நள்ளிரவு முதலே பெட்ரோல் டீசல் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு முதல் பெட்ரோல், டீசல் விலை கச்சா எண்ணையின் விலைக்கு ஏற்ப தினசரி மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக  பொதுமக்கள் கடுமையான சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கையில் உலக அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருக்கிறது. எனவே ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் மீது 1 ரூபாய் சுங்க வரி அதிகரிப்பதாக அறிவித்தார்.

இதையடுத்து, நாடு முழுவதும்  பெட்ரோல் டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

நேற்றுயில் நேற்று காலை 73.20 ரூபாய் விற்பனை செய்துவந்த பெட்ரோல் விலை நேற்று நள்ளிரவு முதல்  2 ரூபாய் 56 காசுகள் அதிகரித்து பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.76 காசுகளாக உயர்ந்துள்ளது.

அதுபோல, டீசல் விலை லிட்டர்க்கு 2 ரூபாய் 56 காசுகள் அதிகரித்து அதிகரித்து ரூ.70.51 காசு களாவும் விற்பனை செய்யப்படுகிறது.  இந்த விலை இன்று  காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.