டில்லி:

த்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனில் பட்ஜெட்டில்,  ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வழிகாட்டுதல் வழங்க புதிய தொலைக்காட்சி சேவை தொடங்கப்படும் என்றும், 75ஆயிரம் இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு  தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்படும் என்றும் அறிவித்து உள்ளார்.

மேலும்,  மனித கழிவுகளை மனிதனே அகற்றும் நிலையை ஒழிப்பதற்காக தொழில்நுட்ப வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.

அரசுத்துறை உட்பட அனைத்துத் துறைகளிலும் டிஜிட்டல் பணம் செலுத்தும் வசதிகள் உள்ளன.

மின்சக்தி வீணடிக்கப்படுவதை தவிர்க்க 25 கோடி எல்இடி பல்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இலவச எல்இடி பல்புகளால் ரூ.18,341 கோடி மிச்சப்படுத்தப்பட்டுள்ளது.

மின்சக்தி வீணடிக்கப்படுவதை தவிர்க்க 25 கோடி எல்இடி பல்புகள் வழங்கப்பட்டுள்ளன.

தனியார் மற்றும் அரசு பங்களிப்புடன் மகளிர் மேம்பாட்டு திட்டங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 1.9 கோடி வீடுகள் வழங்கப்படும்

ரூ80.250 கோடி மதிப்பீட்டில் 1.25 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் சாலைகள் மேம்படுத்தப்படும்

கைத்தறித்துறை மூலம் 100 புதிய தொழில் மையங்கள் அமைத்து 50000 பேருக்கு வேலைவாய்ப்பு

இந்தியர்களுக்கு சர்வதேச அளவில் வேலை வாய்ப்பு பெரும் வகையில் பயிற்சி அளிக்கப்படும்

75,000 இளைஞர்களை தேர்ந்தெடுத்து தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்படுவதாகவும் கூறியது குறிப்பிடத்தக்கது.