சாலையில் சாணம் போட்டதால் எருமை மாட்டின் உரிமையாளருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம்…

 

குவாலியர் :

த்தியபிரதேச மாநிலம் குவாலியர் நகரை தூய்மை படுத்தும் முயற்சியில் அங்குள்ள மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.

சாலைகளை செப்பனிடும் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தெருவில் குப்பை கொட்டினாலோ, அசத்தம் செய்தாலோ அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்த நிலையில் குவாலியரில் பால் பண்ணை வைத்திருக்கும் பேட்டா சிங் என்பவர், அங்குள்ள சாலையில் எருமை மாடுகளை ஓட்டி வந்துள்ளார். அந்த மாடுகள் சாலையில் அங்கும், இங்குமாக சுற்றித்திரிந்துள்ளன.

மாடுகளை வீட்டுக்கு இழுத்து செல்லுமாறு மாநகராட்சி அதிகாரிகள் கூறியதை அவர் பொருட்படுத்த வில்லை.

சுத்தமாக பேணி வைக்கப்பட்ட சாலையில், எருமை மாடு சாணம் போட்டதால், அதிகாரிகள் கோபம் அடைந்தனர்.

“நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு நகரை தூய்மை படுத்தி வருகிறோம். பொறுப்பில்லாமல் மாடுகளை ரோட்டில் ஓட்டி வந்து அசுத்தமாகி விட்டாயே” என அவரை திட்டியதுடன் , சாலையில், மாடு சாணம் போட்டதால் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்தனர்.

வேறு வழி இல்லாமல், பேட்டா சிங், அந்த அபராதத்தொகையை செலுத்தி விட்டு, மாடுகளை ஓட்டிச்சென்றுள்ளார்.

– பா. பாரதி