அயோத்தியில் ராமர்சிலையுடன் சீதை சிலையையும் அமையுங்கள்! காங்கிரஸ் தலைவர் யோகிக்கு கடிதம்

லக்னோ:

யோத்தியில் அமைக்கப்பட உள்ள  ராமர் சிலையுடன் சீதையின் சிலையையும் சேர்த்து அமைக்க வேண்டும்  என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கரண் சிங் , மாநில முதல்வர் யோகிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

உ.பி. மாநிலத்தில் பாஜக ஆட்சி முதல்வர் யோகி தலைமையில் நடைபெற்று வருகிறது. அங்குள்ள  சரயு நதிக்கரையில் பிரம்மாண்டமான ராமர் அமைக்க இருப்பதாக மாநில அரசு அறிவித்தது. சுமார்  151 மீ உயரத்தில் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் கரண்சிங், உ.பி. முதல்வர் யோகி ஆத்தியநாத்துக்கு,  ராமர் சிலையுடன், அவரது மனைவியான சீதாதேவியின் சிலையையும் சேர்த்து அமைக்க வேண்டும் என்று கடிதம் எழுதி உள்ளார்.