மும்பை அருகே மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது : ஒரு பெண் மரணம்

மும்பை

மும்பை அருகே உள்ள பிவண்டி பகுதியில் மூன்று மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது.

மும்பை அருகே உள்ள பிவண்டி பகுதியில் நவி பஸ்தி என்னும் இடத்தில் ஒரு மூன்று மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தது.  இன்று காலை ஒன்பது மணி அளவில் இடிந்து விழுந்த இந்த கட்டிடத்தின் உள்ளே எத்தனை பேர் இருந்தனர் என்பது தெரியவில்லை.

தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  இது வரை 18 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் உடலும், ஆறு பேர் படுகாயம் அடைந்த நிலையிலும் மீட்கப்பட்டுள்ளனர்.  மேலும் 20 பேருக்கு மேல் உள்ளே சிக்கி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.  இந்தக் கட்டிடம் சுமார் 7 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.  விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.