சென்னை:

யிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில், ஏற்கனவே உள்ள தார்சாலை மீது புதியதாக தார் சாலை அமைக்க முயற்சி செய்த சென்னை மாநகராட்சி நிர்வாகம் மீது,அந்த பகுதியைச்சேர்ந்த குடியிருப்பு சங்கம் வழக்கு தொடர்ந்து உள்ளது.

அதில்,  நீதிமன்றங்களின் வழிகாட்டுதலின்படி, பழைய சாலையை கிளறாமல் புதிய சாலை அமைக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

ராதாகிருஷ்ணன் சாலை வணிக மற்றும் குடியிருப்பு கட்டிடங்களின் உரிமையாளர்களின், பிளாசா சென்டர் உரிமையாளர்கள் சங்கம் சென்னை மாநகராட்சி மீது வழக்கு தொடுத்துள்ளது. அதில், ராதாகிருஷ்ணன் சாலையில், நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல் சாலை அமைக்கும் பணி நடைபெறுவதாகவும், ஏற்கனவே போடப்பட்டுள்ள சாலையை கிளறி அகற்றாமல், அதன் மேலேயே சாலை போடும் பணி நடைபெற்று வருவதாகவும், இதுதொடர்பாக கடந்த  2018 ம் ஆண்டு மார்ச் 9 ந்தேதி  நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் வகுத்த வழிகாட்டுதல்களை துல்லியமாக பின்பற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு  கேட்டுக்கொண்டனர்.

இந்த வழக்கு , நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த விவகாரத்தில், ஏற்கனவே , “இந்த நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் வழிகாட்டுதல் நெறிமுறைகளை தெரிவித்து உள்ளது.  நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில் விவேகத்துடன் செயல்படுவது அதிகாரிகளின் கடைமை என்று கூறியவர், அதை மேலும் வலியுறுத்த தேவையில்லை என்றும், அதிகாரிகள் நீதிமன்ற வழிகாட்டுதல்களை மேற்கொள்ள தவறினால், கட்டிட உரிமையாளர்கள் நீதிமன்றத்தை அணுக உரிமை என்றுகூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.யை அமைத்துள்ளனர்.