Random image

‘புல்லட்’டுக்கு என்கவுண்டர்?! தேடுதல் வேட்டையில் தனிப்படை

மதுரை:

சிறைத்துறை பெண் அதிகாரிக்கு வாட்ஸ் அப் மூலம் கொலை மிரட்டல் விடுத்த பிரபல ரவுடியான புல்லட் நாகராஜனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படை போலீசார் புல்லட் நாகராஜனை என் கவுண்டர் செய்ய வாய்ப்பிருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது.

பிரபல ரவுடியின புல்லட் நாகராஜன்  தேனி மாவட்டம், பெரிய குளம் அருகே உள்ள ஜெயமங்கலத்தைச் சேர்ந்தவர். இவர் மீது  பல்வேறு கொலை, கொள்ளை, வழிப்பறி என 30க்கும் மேறப்ட்ட வழக்குகள் உள்ளது. இவரது உறவினர் ஒருவர் சிறையில் இருந்து சமீபத்தில் விடுதலையான நிலையில், அவரை சிறையில் கொடுமைப்படுத்திய குறித்து அறிந்த புல்லட்,  மதுரை சிறைத்துறை எஸ்.பி. ஊர்மிளாவுக்கு வாட்ஸ்-அப் மூலம் மிரட்டல் விடுத்திருந்தார்.

பரபரப்பை ஏற்படுத்திய இந்த மிரட்டல் விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலானது. புல்லட் நாகராஜனின் மிரட்டல் குறித்து சிறைத்துறை அலுவலர் ஜெயராமன் மதுரை மாநகர போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதத்திடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின்பேரில் கரிமேடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, தனிப்படை அடைக்கப்பட்டு  விசாரணை தொடங்கி உள்ளது.

7 தனிப்படை அமைக்கப்பட்டு . புல்லட் நாகராஜனை தேடி வருகின்றனர். ஒருபிரிவினர் தேனி பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில்  புல்லட் கைது செய்யப்படுவார் அல்லது என்கவுண்டர் செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.

புல்லட்டின் மிரட்டல்:

மதுரை சிறைத்துறை எஸ்பி ஊர்மிளாவை மிரட்டி  பிரபல ரவுடி புல்லட் நாகராஜன்  கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ, வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில்,  கிரேட் ஜெனரல் புல்லட் நாகராஜ் பேசுகிறேன். தமிழ்நாட்டில் நான் பார்க்காத ஜெயில் கிடையாது. என் கண் முன்னாடி எத்தனையோ பேரை ஜெயிலில் அடிச்சு இருக்கீங்க? மதுரை ஜெயிலை பொருத்தவரை உனக்கு நிர்வாகத்திறமையே கிடையாது.

அடிப்பதற்காகவே கமாண்டோ பார்ட்டிகளை வச்சுருக்கியா…?

உன்னைய மாதிரி சிறையில் கைதியை அடிச்ச ஒரே காரணத்திற்காக, ஜெயிலர் ஜெயப்பிரகாஷை எரிச்சு கொன்னது ஞாபகமிருக்கும். நாங்க திருந்தி படிச்சு இப்ப பெரிய ஆளாக இருக்கோம்.

கைதி யாருக்காவது பிரச்னை வரட்டும். நீ என்ன செய்தியோ, அதையே நான் செய்ய வேண்டியிருக்கும்.

‘ஆறிலும் சாவு நூறிலும் சாவு’ அதை பத்தி இந்த புல்லட் நாகராஜன் கவலைப்பட மாட்டான்.

மேம், உங்களுக்கு ஒரு ஆப்பர்சூனிட்டி கொடுக்கிறேன். தலைமை காவலர் பழனிக்குமார் இருக்காரே? கஞ்சா கடத்துறவரு, அவரை வச்சு கைதிகள் காசை கொள்ளையடிக்கிறீங்களே? இதற்கு வெட்கமா இல்லையா?

இதை விட்டு வேறு வேலையை பார்த்துடலாம். இப்ப பேசறேன்லே, ஏதாவது செய்து பாருங்கள். உங்களால முடியாது. நான் பழைய புல்லட் நாகராஜன் கிடையாது.

நீங்க எப்படியும் வெளியில் வந்து தானே ஆகணும். நான் ஒண்ணும் செய்ய மாட்டேன். பயலுக ஏதாவது செய்திடுவாங்க,

அப்புறம் லாரி உங்க மேல கூட ஏறலாம். பொம்பளையா இருக்கீங்க, திருந்துங்க, 

புல்லட் நாகராஜனின் இந்த கொலை மிரட்டல்  சிறைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக பேசிய எஸ்பி ஊர்மிளா, ரவுடி நாகராஜை, தான் பார்த்த‌து கூட இல்லை; மிரட்டல் ஆடியோ தொடர்பாக சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளதாக ஊர்மிளா கூறி உள்ளார்.